மெல்பேர்னில் கடந்த ஆண்டு சனாயா சாஹிப் என்ற 15 மாத பெண் குழந்தை கொலை செய்யப்பட்டிருந்த நிலையில், அதைத் தானே கொன்றதாக அக்குழந்தையின் தாய் Sofina Nikat ஒப்புக்கொண்டுள்ளார்.
2016 ஏப்ரல் 9ம் திகதி, சனாயாவை Darebin Creek பகுதியிலுள்ள பூங்காவுக்கு அழைத்துச் சென்ற Sofina Nikat, தனது குழந்தையை யாரோ கடத்திச் சென்றுவிட்டதாக பொலிஸாரிடம் தெரிவித்திருந்தார்.
எனினும் 3 நாட்கள் கழித்து குழந்தையின் உடல் கண்டெடுக்கப்பட்ட பின்னர், அக்குழந்தையைக் கொன்ற குற்றச்சாட்டில் Sofina Nikat கைதுசெய்யப்பட்டிருந்த நிலையில், தனது குழந்தையை மூச்சுத்திணற வைத்து கொலை செய்ததை காவல்துறையினரிடம் ஏற்கனவே ஒப்புக்கொண்டிருந்த Sofina Nikat அதை நீதிமன்றிலும் ஒப்புக்கொண்டார்.
கடும் மன அழுத்தத்தால் பாதிக்கப்பட்டிருந்தபோது இக்கொலையைச் செய்ததாக சுட்டிக்காட்டப்பட்டதையடுத்து, ஏற்கனவே 529 நாட்கள் தடுப்புக்காவலில் இருந்த Sofina Nikat-ஐ பிணையில் செல்ல நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது.
மேலும் பல்வேறு சூழ்நிலைகளைக் கருத்திற்கொண்டு, சாதாரணமாக கொலைக் குற்றவாளி ஒருவருக்கு வழங்கப்படும் அதிகபட்ச தண்டனை வழங்கப்படாமல் ஆகக்குறைந்தபட்ச தண்டனையே Sofina Nikat-வுக்கு வழங்கப்படலாம் என தெரிவிக்கப்படுகின்றது.
