SKIP TO MAIN CONTENT

குழந்தையைக் கொன்ற தாய் குறைந்தபட்ச தண்டனையுடன் விடுதலை!

Sofina Nikat
An undated image obtained from Facebook of missing 15-month-old Sanaya Sahib pictured with her mother Sofina Nikat. Source: AAP

1 min read

Published

Presented by Renuka


Skip to article content

மெல்பேர்னில் கடந்த ஆண்டு சனாயா சாஹிப் என்ற 15 மாத பெண் குழந்தையைக் கொலை செய்த அக்குழந்தையின் தாய் Sofina Nikat குறைந்தபட்ச தண்டனையான 12 மாத சமூக சீர்திருத்த உத்தரவு-community corrections order-உடன் விடுதலை செய்யப்பட்டுள்ளார்.

2016 ஏப்ரல் 9ம் திகதி, சனாயாவை Darebin Creek பகுதியிலுள்ள பூங்காவுக்கு அழைத்துச் சென்ற Sofina Nikat, தனது குழந்தையை யாரோ கடத்திச் சென்றுவிட்டதாக பொலிஸாரிடம் தெரிவித்திருந்தார்.

எனினும் 3 நாட்கள் கழித்து குழந்தையின் உடல் கண்டெடுக்கப்பட்ட பின்னர், அக்குழந்தையைக் கொன்ற குற்றச்சாட்டில் Sofina Nikat கைதுசெய்யப்பட்டிருந்த நிலையில், தனது குழந்தையை மூச்சுத்திணற வைத்து கொலை செய்ததை காவல்துறையினரிடம் ஏற்கனவே ஒப்புக்கொண்டிருந்த Sofina Nikat அதை நீதிமன்றிலும் ஒப்புக்கொண்டார்.

கடும் மன அழுத்தத்தால் பாதிக்கப்பட்டிருந்தபோது இக்கொலையைச் செய்ததாக சுட்டிக்காட்டப்பட்டதையடுத்து, ஏற்கனவே 529 நாட்கள் தடுப்புக்காவலில் இருந்து பிணையில் விடுதலை செய்யப்பட்டிருந்த Sofina Nikat-ஐ 12 மாத community corrections order-உடன் விடுதலை செய்து நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

இந்தநிலையில் கொலை செய்யப்பட்ட அந்த பச்சிளங்குழந்தைக்கு நீதி கிடைக்கவில்லை என குழந்தையின் தந்தை வழி உறவினர்கள் குற்றம் சாட்டியுள்ளதுடன், நீதிமன்றின் இத்தீர்ப்பு தமக்கு ஏமாற்றமளிப்பதாகவும் தெரிவித்துள்ளனர்.

 


Follow SBS Tamil

Download our apps

Watch on SBS

Tamil News

Stream now