சர்வதேச காவல்துறை அமைப்பான இன்டர்போலின் தலைவர் Meng Hong-wei காணாமல்போயுள்ளதாக தெரிவிக்கப்படும்நிலையில் இது தொடர்பில் பிரான்ஸ் விசாரணைகளை ஆரம்பித்துள்ளது.
கடந்த மாதம் 25ஆம் தேதி, பிரான்ஸிலுள்ள இன்டர்போல் தலைமையகத்திலிருந்து, தனது சொந்த நாடான சீனாவுக்குக் கிளம்பிச் சென்ற Meng Hong-wei அவர்களை இதுவரை தொடர்புகொள்ள முடியவில்லை என அவரது குடும்பத்தினர் கூறியுள்ளனர்.
இந்தப்பின்னணியில் அவர் பிரான்ஸில் காணாமல்போகவில்லை என்று கூறியுள்ள பிரான்ஸ் அதிகாரிகள் இதுகுறித்த விசாரணைகளை ஆரம்பித்துள்ளதாக குறிப்பிட்டுள்ளனர்.
இதேவேளை இன்டர்போலின் தலைவர் விசாரணைக்காக சீனாவுக்குக் கொண்டுசெல்லப்பட்டிருப்பதாகவும் என்ன காரணத்திற்காக இவர்மீது விசாரணை நடத்தப்படுகிறது என்ற விபரங்கள் தெரியவரவில்லை என்றும் சில ஊடகங்கள் செய்திவெளியிட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
