சுற்றுலா விசாவில் ஆஸ்திரேலியாவுக்கு வந்தபோது இரண்டு கைத்தொலைபேசிகளில் சிறுவர் பாலியல் காணொளிகள் மற்றும் சட்டவிரோத படங்களை வைத்திருந்தார் என்ற குற்றச்சாட்டின் பேரில் விமானநிலையத்தில்வைத்து கைது செய்யப்பட்ட இந்திய இளைஞர் இரண்டு மாத சிறைத்தண்டனையை முடித்துக்கொண்டு சொந்த நாட்டுக்கு திருப்பி அனுப்பப்படவுள்ளார்.
கோலாலம்பூரிலிருந்து பேர்த் விமானநிலையத்தில் வந்திறங்கும்போது கைது செய்யப்பட்ட 32 வயதான இந்த இளைஞர் விசாணைக்கு உட்படுத்தப்பட்டபோது நீதிமன்றத்தில் தனது குற்றத்தை ஒப்புக்கொண்டிருந்தார்.
வெளிநாட்டு குடிமகன் என்ற காரணத்தினால், கடுமையான சட்டவிதிகளின்கீழ் தண்டிக்கப்படாமல் இவரது விசா நிராகரிக்கப்பட்டு இரண்டு மாத சிறைத்தண்டனையின் பின் சொந்த நாட்டுக்கு திருப்பி அனுப்பப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த வருடம் மாத்திரம் ஆஸ்திரேலிய விமானநிலையங்களில் இவ்வாறான சிறுவர் துஷ்பிரயோக வஸ்துக்களுடன் வந்து இறங்கியவர்களின் எண்ணிக்கை 223 என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
