SKIP TO MAIN CONTENT

கைபேசியிலிருந்த காணொளியால் விமானநிலையத்தில் வைத்து இந்தியரின் விசா ரத்து!

An ABF officer at Perth Airport searches the baggage of the Indian national
File Image Source: ABF

1 min read

Published

Presented by Renuka


Skip to article content

குழந்தைகளுக்கு எதிரான வன்முறை அடங்கிய காணொளியை தனது கைத்தொலைபேசியில் வைத்திருந்த இந்தியர் ஒருவர் பெர்த் விமான நிலையத்தில்வைத்து விசா ரத்துச் செய்யப்பட்டு திருப்பி அனுப்பப்பட்டுள்ளார்.

மலேசியா வழியாக பெர்த் விமானநிலையத்தில் கடந்த வியாழக்கிழமை சுற்றுலா விசாவில் வந்திறங்கிய 45 வயதுடைய இந்தியருக்கே இந்த அனுபவம் ஏற்பட்டுள்ளது.

சட்டவிரோதமான பொருட்கள் மற்றும் இலத்திரனியல் உபகரணங்களில் சிறுவர் பாலியல் காணொளிகள் உட்பட பல விடயங்கள் தடைசெய்யப்பட்டு ஆஸ்திரேலிய விமானநிலையங்களில் கடுமையான சட்டம் தற்போது கடைப்பிடிக்கப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

இந்நிலையிலேயே மேற்படி சம்பவம் இடம்பெற்றிருக்கிறது.

குறிப்பிட்ட இந்திய பிரஜையின் கைத்தொலைபேசியிலிருந்த காணொளி பாலியல் ரீதியானது அல்ல என்றாலும் அது சிறுவருக்கு எதிராக வன்முறையை காண்பிக்கும் ஒன்றாக அடையாளம் காணப்பட்டதினால் ஆஸ்திரேலிய எல்லைப்பாதுகாப்பு பிரிவினர் இந்த கடும் நடவடிக்கையை மேற்கொண்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.


Follow SBS Tamil

Download our apps

Watch on SBS

Tamil News

Stream now