கிரிக்கெட் விளையாடிக்கொண்டிருந்தபோது திடீரென்று மூச்செடுப்பதற்கு சிரமப்பட்டு தரையில் உட்கார்ந்து அப்படியே விழுந்து இறந்த இளம் குடும்பஸ்தர் ஒருவரது மரணம் நியூசிலாந்துவாழ் புலம்யெர் இந்திய சமூகத்தினரை அதிர்ச்சிக்கு உள்ளாக்கியுள்ளது.
இந்தியப் பின்னணி கொண்ட ஹரீஷ் ஞானதரன் (வயது 33) என்பவரே இவ்வாறு கிரிக்கெட் ஆடுகளத்தில் உயிரிழந்தவர் ஆவார்.
இந்தச்சம்பவம் கடந்த சனிக்கிழமை அன்று நியூசிலாந்து Sunnyvale பகுதியில் இடம்பெற்றுள்ளது.
லண்டனில் உயர் கல்வி கற்று ஐந்து வருடங்களுக்கு முன்னர் திருமணம் செய்துகொண்டு நியூசிலாந்துக்கு குடிபெயர்ந்த ஹரீஷிற்கு மூன்று வயதில் ஒரு மகள் உள்ளார்.
ஹரிஷ் திறமையான கிரிக்கெட் விளையாட்டு வீரர். நியூசிலாந்து Green Island கழகத்தில் தொடர்ச்சியாக விளையாடி வருபவர். சம்பவம் இடம்பெற்ற அன்றைய தினம்கூட ஹரீஷ் ஆட்டமிழக்கமாமல் 30 ஓட்டங்களை பெற்றிருந்தார்.
ஹரீஷின் மரணத்தினால் அதிர்ச்சிக்கு உள்ளாகியுள்ள அவரது குடும்பத்தினர், உறவினர், நண்பர்கள் அனைவருக்கும் அவரது விளையாட்டுக்கழகத்தினர் இரங்கல் தெரிவித்திருக்கிறார்கள்.
