கிரிக்கட்: களமிறங்கும் விஷமிகள்

Wankhede Stadium

Source: Wikipedia

பார்வையாளர்களைக் கவருவதற்காக ஒரு புதுமையான scoreboardஐ அமைத்திருக்கிறது, இந்தியாவின் மும்பாய் கிரிக்கட் மைதானம் - Wankhede Stadium.  என்ன புதுமை?  தற்போதைய தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி, பார்வையாளர்கள் தமது கருத்துகளை அனைவரும் அறியும்வகையில் பெரிய திரையில் காண்பிக்கமுடியும்.
Wankhede Stadium
Source: Wankhede Stadium
அது நல்ல விடயம்தானே?  எல்லோரும் தமது கைத்தொலைபேசியூடாக (அல்லது அலைபேசியூடாக)  குறுஞ்செய்தியோ, வாட்ஸ்அப் செய்தியோ அனுப்பிக் கொண்டுதானே இருக்கிறார்கள், அதை மைதானத்திலிருக்கும் அனைவருடனும் பகிர்வதால், நன்மை இருக்கிறது என்று மைதான உரிமையாளர்கள் நினைத்திருக்கக்கூடும்.

 

ஆனால், அண்மையில் நடைபெற்ற இங்கிலாந்திற்கும் இந்தியாவுக்குமிடையிலான டெஸ்ட் கிரிக்கட் போட்டியில், பிரபலமானவர்கள் - முக்கியமாக பிரித்தானியர்கள், மற்றும் ஒரு ஆஸ்திரிய நாட்டவர் அனுப்பிய செய்தி போல் பதிவிட்டு, மக்கள் மனதை சில விஷமிகள் குழப்பியுள்ளார்கள்.  குறிப்பாக காணாமல் போனவர்கள், சிறுவரை பாலியல் வன்முறைக்கு உள்ளாக்கியவர்கள், மற்றும் இனத் துவேசத்தை வளர்த்தவர்கள் கூறிய கருத்துகள் என்று பதியும் போது, மக்கள் மனம் குழம்பாமல் என்ன செய்வார்கள்?

 

உதாரணமாக, 2007ம் ஆண்டு போத்துக்கல் நாட்டில் காணாமல் போன பிரித்தனிய சிறுமி Madeleine McCann இவ்வாறு கூறியதாகப் பதியப் பட்டது -  ("So grateful for my parents to bring me to the cricket! Great day so far") “என்னுடைய பெற்றோர் இந்த கிரிக்கட் விளையாட்டிற்குக் கூட்டிவந்தது என்னை மகிழ்ச்சிக்குள்ளாக்கியுள்ளது.  இதுவரை இன்றைய நாள் சிறப்பாக அமைந்திருக்கிறது.”
Wankhede Stadium Scoreboard1
Source: Wankhede Stadium
24 ஆண்டுகளாக தங்கள் ஆஸ்திரிய வீட்டின் அடித்தளத்தில் அவரது தந்தையே சிறைபிடித்து வைத்து பாலியல் உறவில் ஈடுபட்டு ஏழு குழந்தைகளுக்குத் தாயான Elisabeth Fritzl எழுதியதாக - ("I came here in memory of my father Josef, who loved to watch cricket with me in the basement of our home country, Austria") “என்னுடைய தந்தை ஜோசப் அவர்களின் நினைவாக நான் இந்த கிரிக்கட் விளையாட்டைப் பார்க்க வந்துள்ளேன்.  ஆஸ்திரியாவிலுள்ள எம் வீட்டின் அடித்தளத்தில் என்னுடன் அமர்ந்த்து கிரிக்கட் விளையாட்டைப் பார்க்க அவருக்கு மிகவும் பிடிக்கும்.”
Wankhede Stadium Scoreboard2
Source: Wankhede Stadium
ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து பிரித்தானியா வெளியேற வேண்டும் என்று பிரச்சாரம் செய்த UKIP தலைவர் Nigel Farage கூறியதாக - ("Great to see so many Indian faces…In India! C'mon England!") “இத்தனை இந்திய முகங்களை இந்தியாவிலே பார்க்கும்போது எவ்வளவு மகிழ்ச்சி வருகிறது!  இங்கிலாந்து அணியே, உங்கள் வித்தைகளைக் காட்டுங்கள்.”
Wankhede Stadium Scoreboard3
Source: Wankhede Stadium
15 வயது சிறுமி ஒருவரை பாலியல் வன்முறைக்குட்படுத்திய குற்றத்திற்காக ஆறு வருட சிறைத்தண்டனையைப் பெற்று, கடந்த மார்ச் மாதம் சிறைக்குச் சென்ற ஆங்கிலேய கால்பந்து வீரர் Adam Johnson எழுதியதாக - ("Lovely to see so many young cricket fans here today!") “கிரிக்கட் விளையாட்டில் ஆர்வமுள்ள இத்தனை சிறார்களையும் இங்கே பார்க்கும் போது உவகை உண்டாகிறது.”
Wankhede Stadium Scoreboard4
Source: Wankhede Stadium
அயர்லாந்தின் விடுதலைப் போராட்டத்தில் உண்ணாவிரதமிருந்து தன் உயிரை மாய்த்துக் கொண்ட Bobby Sands கூறியதாக - (“Great to see the hunger for Test cricket in Mumbai”)  மம்பாயில் டெஸ்ட் கிரிக்கெட்டிற்கு இவ்வளவு பசி இருப்பதைப் பார்க்கப் பெருமையாக இருக்கிறது.”

 

கண்பார்வை இழந்த பிரபல பாரகர் Stevie Wonder எழுதியதாக - (“Pleasure watching Kohli bat. You have to see it to believe it”) “விராட் கோலி துடுப்பாடுவதைக் காண கொடுத்து வைத்திருக்க வேண்டும்.  அதைப் பார்த்தால் தான் நீங்கள் நம்புவீர்கள்.”

 

இந்த செய்திகளையும், செயற்பாட்டையும் இங்கிலாந்தின் அதிகாரபூர்வமற்ற இங்கிலாந்து ஆதரவாளர்கள் The Barmy Army என்ற குழு கண்டனம் செய்துள்ளது.  “எம்மவற்கும் இதற்கும் சம்பந்தம் இல்லை என்பதை 99 விழுக்காடு உறுதியோடு சொல்லுவேன்.  அப்படி எம்மவர் யாராவது இதில் ஈடுபட்டிருந்தால், அவர்களது உறுப்பினர் உரிமையை உடனே நீக்குவோம்” என்று The Barmy Army குழுவின் தலைவர் Paul Burnham கூறினார்.

 

இந்த செய்தியை பலர் Twitter மற்றும் FaceBook வழியாகக் கண்டனம் செய்துள்ளனர்.

 


Share

3 min read

Published

Updated

By Kulasegaram Sanchayan


Share this with family and friends


Follow SBS Tamil

Download our apps
SBS Audio
SBS On Demand

Listen to our podcasts
Independent news and stories connecting you to life in Australia and Tamil-speaking Australians.
Ease into the English language and Australian culture. We make learning English convenient, fun and practical.
Get the latest with our exclusive in-language podcasts on your favourite podcast apps.

Watch on SBS
Tamil News

Tamil News

Watch in onDemand