SKIP TO MAIN CONTENT

குறைந்த விலையில் விமானப்பயணச்சீட்டுக்களைப் பெறுவதற்கான உதவி!

Singapore Airlines
Representative Image Source: Singapore Airlines

1 min read

Published

Updated

Presented by Renuka.T

Source: Google


Skip to article content

சரியான திட்டமிடல் இல்லாததால் அதிக விலை கொடுத்து விமானப் பயணச்சீட்டுக்களை கொள்வனவு செய்த அனுபவம் நம்மில் பலருக்கு இருக்கலாம். அப்படியான சூழ்நிலையைத் தவிர்ப்பதற்கு புதிய வசதி ஒன்றை ஏற்படுத்தவுள்ளதாக கூகுள் நிறுவனம் அறிவித்துள்ளது.

கூகுள் நிறுவனத்தின் Flights சேவை மூலம் நமது பயணங்களுக்கான விமானசேவைகளைத் தேடும் வசதி ஏற்கனவே உள்ளமை நாமறிந்த ஒன்று. இதை இன்னும் சற்று மேம்படுத்தி குறைந்த விலையில் விமானப் பயணச்சீட்டுக்களைப் பெற்றுக் கொள்வதற்கான வசதி ஒன்று அறிமுகப்படுத்தப்படுவதாக குறிப்பிடப்படுகின்றது.

அதாவது நீங்கள் பயணம் செய்யும் நாள், செல்ல வேண்டிய இடம் மற்றும் பிடித்தமான விமான சேவை ஆகியவற்றை கூகுள் Flights சேவையில் பதிவு செய்ய வேண்டும். இப்படி நீங்கள் பதிவு செய்த நாள் முதல் விமானக் கட்டணத்தில் ஏற்படும் மாறுதல்களை கூகுள் தெரிவித்துக்கொண்டே இருக்கும்.

google
Source: Google

குறிப்பாக நீங்கள் செல்ல வேண்டிய விமானத்திற்கான பயணச்சீட்டுகளின் விலை விரைவில் அதிகரிக்கப்போகிறது என்பதை கூகுள் Flights முன்கூட்டியே தெரிவித்துவிடும் என்பதால் நீங்கள் குறைந்த விலையில் விமானப்பயணச்சீட்டை பெற்றுக்கொள்ள முடியும் என கூகுள் நிறுவனம்  அறிவித்துள்ளது.

அது மட்டுமல்லாமல் ஹோட்டல்கள் வழங்கும் சிறப்புச் சலுகைகளைப் பார்வையிட்டு, மலிவான விலையில் ஹோட்டல்களைப் பதிவு செய்வதற்கான வசதியும் மேம்படுத்தப்படுவதாக கூகுள் நிறுவனம் தெரிவித்துள்ளது.

 


Follow SBS Tamil

Download our apps

Watch on SBS

Tamil News

Stream now