குறைந்த வருமானத்துடன் தொழில் செய்பவர்களின் (lowest-paid workers) சம்பள உயர்வு தொடர்பில் ஆஸ்திரேலிய தொழிற்சங்கங்களின் சம்மேளனம் மிக முக்கியமான கோரிக்கையை Fair Work Commission அமைப்பிடம் வலியுறுத்தியுள்ளது.
இதன் பிரகாரம், இந்த வகையிலான தொழிலாளர்களுக்கு இவ்வருடம் முதல் வாரச்சம்பளத்தினை 43 டொலர்களினால் அதிகரிக்குமாறு ஆஸ்திரேலிய தொழிற்சங்கங்களின் சம்மேளனம் கோரியுள்ளது.
இவ்வாறு குறைந்த வருமானத்தில் தொழில் செய்பவர்களின் (lowest-paid workers) வார வருமானத்தை அடுத்த வருட நடுப்பகுதியில் 1.5 வீதத்தினாலும் 2020 ஆம் ஆண்டிற்கு முன்னர் மூன்றாவது கட்டமாக 5.5 வீத சம்பள உயர்வினையும் வழங்கவேண்டும் என்று கோரியுள்ளது.
குறைந்த வருமான தொழிலாளர்கள் தற்போது மணித்தியாலத்துக்கு 18.93 டொலர்களை பெறுகிறார்கள். அல்லது 38 மணிநேரம் பணிபுரிகிறவர்கள் வாரச்சம்பளமாக 719.20 டொலர்களை பெறுகிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
Fair Work Commission அமைப்பிடம் இந்த சம்பள உயர்வு தொடர்பாக வலியுறுத்தியுள்ள ஆஸ்திரேலிய தொழிற்சங்கங்களின் சம்மேளனத்தின் பேச்சாளர் கூறும்போது, தற்போது மிகக்குறைந்த சம்பளத்துடன் பணிபுரிகின்ற தொழிலாளர்கள் வறுமைக்கோட்டின் கீழ் தள்ளப்படுவது ஏற்றுக்கொள்ளப்படக்கூடியது என்று தற்போதைய Morrison அரசு நம்புகின்றது. ஆனால், அந்த எடுகோளிலிருந்து பாதிக்கப்பட்டுள்ள தொழிலாளர் வளத்தை மீட்டெடுப்பதற்காகவே இந்த நடவடிக்கையை நாங்கள் மேற்கொண்டிருக்கிறோம் என்று கூறியுள்ளார்.
