நியூசிலாந்து கிறைஸ்ட் சேர்ச் தாக்குதலில் படுகொலை செய்யப்பட்டவர்களின் உறவினர்கள் மற்றும் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவிசெய்வதற்கென அமெரிக்க - ஆஸ்திரேலிய - நியூசிலாந்து யூத சமூகங்கள் ஒரு மில்லியன் டொலர்களை கிறைஸ்ட் சேர்ச் நகர கவுன்ஸிலிடம் வழங்கியுள்ளார்கள்.
மேற்படி யூத அமைப்புக்களின் பிரதிநிதிகள் நேற்றுமுன்தினம் புதன்கிழமை கிறைஸ்ட்சேர்ச் நகர கவுன்ஸிலிடம் இதற்கான காசோலையை வழங்கியுள்ளார்கள்.
கிறைஸ்ட்சேர்ச் மசூதிகளில் தாக்குதல் மேற்கொள்ளப்பட்டு நான்கு மாதங்களில் குறிப்பிட்ட புலம்பெயர் அமைப்புக்கள் தங்களது சமூகத்துக்கு இவ்வாறனதொரு ஆதரவை வழங்கியிருப்பதையிவிட்டு, கிறைஸ்ட்சேர்ச் முஸ்லிம் சமூகம் நன்றி தெரிவித்துள்ளது.
கவுன்ஸிலின் ஊடாக வழங்கப்பட்டுள்ள இந்த நிதி மசூதிகளில் மேற்கொள்ளப்பட்ட தாக்குதலினால் படுகொலை செய்யப்பட்ட 51 பேரினதும் குடும்பங்களின் கல்வி, சுகாதாரம், நலவாழ்வு மற்றும் உளவள உதவிகளுக்கு பயன்படுத்தப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
