SKIP TO MAIN CONTENT

கோடை கால பாதுகாப்பு

HEAT
Source: National governments

5 min read

Published

Updated


Skip to article content

ஆஸ்திரேலியாவில் ஒவ்வொரு வருடமும் கடும் வெப்பம் மற்றும் அதையொட்டிய விபத்துக்களால் பலர் உயிரிழக்கின்றனர். இதில் பெரும்பாலான உயிரிழப்புக்கள் தவிர்த்திருக்கக்கூடியவையே என சொல்லப்படுகிறது. சுட்டெரிக்கும் கோடை காலத்தில் நம்மை எப்படிப் பாதுகாப்பதென்பதைப் பார்ப்போம்.

 Glass of Water
Source: Open Source

கோடை காலத்தில் உடல் Dehydrate ஆகாமல் தடுப்பதற்கு நிறையத் தண்ணீர் பருகுங்கள். குளிர்மையான பழங்கள் மற்றும் சாலட் வகைகளை அதிகம் உண்ணலாம்.

வெளியில் செல்லும் போது மறக்காமல் சன் கிளாஸ், தொப்பி அல்லது குடை எடுத்துச் செல்லுங்கள். பொருத்தமான ஆடை  அணியுங்கள். அத்துடன் சன் ஸ்கீன் லோஷன் SPF30+ பூசிக்கொள்ளுங்கள்.

heat
Source: Open Source

Fans, coolers,குளிரூட்டி போன்றவற்றைப் பாவித்து வீட்டைக் குளிர்மையாக்குங்கள். உங்கள் குளிரூட்டிகளை 24 டிகிரியில் வைத்துக் கொள்ளுங்கள். இது சுற்றுச்சூழலுக்கு உகந்தது மட்டுமல்ல உங்கள் உடல் வெப்பநிலையையும் சமநிலையில் பேண உதவும்.

air
Source: Open Source

Shopping centres,சினிமா, நூலகம் போன்ற இடங்களுக்குச் செல்வதன் மூலம் வெப்பத்தின் பிடியிலிருந்து ஓரளவு தப்பிக்கலாம்.

வீட்டின் ஜன்னல் blinds போன்றவற்றை மூடி வையுங்கள். இதன்மூலம் வீடு அதிகம் சூடாவதைத் தடுக்கலாம்.

நீந்துதல் அல்லது குளிர் நீரில் குளிப்பதன் மூலம் அதீத வெப்பத்திலிருந்து சற்றே விடுதலை பெறலாம்.

வெயில் காலத்தில் பசியெடுப்பது சற்றுக் குறைவாக இருக்கும். அதனால் சாப்பிடாமல் இருக்காமல் உங்கள் வயிற்றையும் சற்று கவனித்துக்கொள்ளுங்கள்.

வெப்பம் அதிகமான நாட்களில் காபி, டீ மற்றும் மதுபானம் அருந்துவதைத் தவிர்க்கவும். இது Dehydration ஐ இன்னும் அதிகரிக்கும்

கோடை காலத்தில் உணவுப்பொருட்கள் சீக்கிரம் கெட்டுப்போகும் என்பதால் சாப்பிட்டவுடன் உணவுப்பொருட்களை குளிர்சாதனப் பெட்டியில் வைத்துவிடுங்கள்.

car
Source: Open Source

5 நிமிடமோ 50 நிமிடமோ ஒருநாளும் உங்கள் பிள்ளைகளையோ செல்லப்பிராணிகளையோ காரில் வைத்து பூட்டிவிட்டுச் செல்லாதீர்கள். அது தண்டனைக்குரிய குற்றம் என்பதுடன் அவர்களது உயிருக்கும் ஆபத்து ஏற்படலாம்.

bbq
Source: Open Source

வீட்டின் வெளிப்புறத்திலோ அல்லது வெளியிடங்களிலோ BBQ செய்யும் போது மிகவும் எச்சரிக்கை தேவை. நெருப்பைப் பற்ற வைப்பதற்கு முன் BBQ சரியாக வேலை செய்யக்கூடிய நிலையில் உள்ளதா என பார்த்துவிடவும். இதன்மூலம் தேவையற்ற விபத்துக்களைத் தவிர்க்கலாம்.

சிறுபிள்ளைகளுக்கு அருகில் தீப்பெட்டி, lighters போன்றவற்றை வைக்க வேண்டாம். அவை விளையாட்டுப் பொருட்கள் அல்ல என்பதை அவர்களுக்கு சொல்லிக் கொடுங்கள். 

Garage மற்றும் Shed இல் இரசாயனப் பொருட்கள் அல்லது எரிபொருட்களை சேமித்து வைத்திருந்தால் அவற்றை எச்சரிக்கையுடன் கையாளவும்.

புற்கள் வெட்டும் போது சூரிய கதிர்களிலிருந்து உங்களைப் பாதுகாத்துக் கொள்ளுங்கள். அதேபோல் புல் வெட்டும் இயந்திரம் சூடாக இருக்கும் போது எரிபொருள் நிரப்ப வேண்டாம்.

Bushfire ஏற்படக்கூடிய ஆபத்து உள்ள இடம் என்றால் எப்போதும் விழிப்பாக இருங்கள். அத்துடன் உங்கள் வீட்டைச் சுற்றியுள்ள பகுதியை மரங்கள், செடிகள், குப்பைகள் அற்றதாக வைத்துக்கொள்ளுங்கள்.

உங்கள் வீடுகளில் உள்ள smoke alarms சரியாக வேலை செய்கிறதா என்பதை உறுதிப்படுத்திக் கொள்ளுங்கள்.

எப்போதும் வீட்டில் ஒரு extinguisher உம் fire blanket உம் வைத்திருங்கள். அவற்றை எப்படிப் பயன்படுத்துவது என்பதை வீட்டிலுள்ள அனைவருக்கும் சொல்லிக் கொடுங்கள்.

ஒருநாளும் வீட்டிற்குள் இருக்கும் போது deadlock ஆல் பூட்ட வேண்டாம். தீ விபத்து ஏற்பட்டால் உடனடியாக வீட்டைவிட்டு வெளியேற முடியாதவாறு மாட்டிக் கொள்ள நேரிடும்.

Picnic செல்கிறபோது அடுப்போ, மெழுகுதிரியோ எதுவாயினும் ஆட்கள் அருகில் இல்லாதபோது எரிந்து கொண்டிருக்க விடவேண்டாம்.

புகைப்பிடிப்பவர்கள் சிகரட்டின் நெருப்பை முழுமையாக அணைக்காமல் கண்டபடி வீச வேண்டாம்.

beach
Source: Open Source

கோடை காலத்தில் பலர் கடற்கரை மற்றும் ஆற்றங்கரைகளுக்குச் சென்று நீந்துவது வழக்கம். நீந்துவதற்கு பாதுகாப்பான இடம் என வரையறுக்கப்பட்ட எல்லைக்குள் மட்டும் நீந்துங்கள்.

camp
Source: Open Source

Camping செல்பவர்கள் எங்கே கூடாரமிட்டு தங்கப்போகிறீர்கள் என்பதை முன்கூட்டியே திட்டமிட்டு அந்த இடம் பாதுகாப்பானதா என்பதை உறுதிப்படுத்திக் கொள்ளுங்கள். நெருப்புப் பற்றவைக்கும் போது அவதானம் தேவை. மற்றும் கோடை காலத்தில் விஷ ஜந்துக்களின் நடமாட்டம் அதிகம் என்பதால் அது குறித்தும் எச்சரிக்கையாக இருக்கவும்.

அதிகசூடான நாட்களில் உதவிக்கு யாருமில்லாத நிலையில் உங்கள் அயல்வீட்டில் வசிக்கும் முதியவர்களையும் நோயாளிகளையும் கொஞ்சம் கவனித்துக் கொள்ளுங்கள்.

Beat The Heat

  • Stay indoors – this may seem self explanatory but it’s surprising the number of people you see outside on hot   days. If you get cabin fever, get out and about early in the morning before the sun gets too hot.
  • Drink plenty of water
  • Keep your home shaded - closing curtains or blinds may make rooms dark but will keep the temperature down by a couple of degrees.
  • Go for a swim – get up early and head to a public pool or sea baths, if you have some nearby.
  • Keep your air conditioner at 24 degrees – not only does this help the environment but your body will remain cool at this temperature and the effect ofthe heat will not be felt as much when you do venture out.
  • Check on friends or neighbours – the heat can have a devastating effect on those who are older or less mobile, so make sure that those who are vulnerable are OK.
  • Don’t forget to eat – when it’s hot, your appetite will decrease but not eating will leave you feeling weak. Eat little and often.
  • Make sure you have a sufficient number of working smoke alarms throughout your home that are tested regularly and are supported by a written home escape plan in case of fire.
  • If you have a gas, electric or wood BBQ always check that it is in safe working order before lighting and that it is always in the care of a responsible adult when in use.
  • Always keep lighters and matches away from children and educate that they are "tools not toys" to only be used by responsible adults.
  • If you have a garage or shed remember to take extra care with any stored chemicals and fuels and always refuel mowers, edgers etc when they are cold and in the open.
  • If you live in a bushfire prone area keep the ground around your home clear of leaves and other litter and remember to clean your gutters regularly.
  • Never leave cooking, heaters, open fires or candles unattended
  • Ensure cigarette ash and butts are extinguished.
  • Keep a fire extinguisher and fire blanket and know how to use them
  • Never deadlock yourself inside the house.
  • Avoid tea, coffee and alcohol (these can have a dehydrating effect)
  • At home, use fans, coolers or air-conditioning
  • Consider going to cooler public places like shopping centres, cinemas or libraries
  • When outside wear a wide-brimmed hat, sunglasses and loose, comfortable clothing with long sleeves
  • Remember to use SPF30+ sun-screen every two hours!
  • Never leave anyone (particularly children or the elderly) in an unattended car (temperatures inside a car can rise to 50 degrees within a few minutes, leading to serious illness or death)
  • Always swim between the red and yellow flags on beaches as this way you are being watched by our terrific lifeguards and surf lifesavers.
  • Ensure good food hygiene continues during warmer weather including proper refrigeration.

Follow SBS Tamil

Download our apps

Watch on SBS

Tamil News

Stream now