குடிபோதையில் வாகனம் ஓட்டுபவர்களைத் தண்டிக்கும் வகையில் மிகக்கடுமையான சட்டங்களை அமுல்படுத்த விக்டோரியா மாநில அரசு தயாராகிவருகிறது.
இதன்படி குடிபோதையில் வாகனம் ஓட்டுபவர்களுக்கான சுவாசப் பரிசோதனையின்போது, இரத்தத்திலுள்ள மதுபானத்தின் அளவு 0.05 முதல் 0.07 ஆக இருந்தாலும்கூட, அவர்களது ஓட்டுநர் உரிமம் உடனடியாக ரத்துச் செய்யப்படும்.
அத்துடன் அவர்கள் மீண்டும் வாகனம் ஓட்ட வேண்டுமெனில், alcohol interlock device எனப்படும் சுவாசப் பரிசோதனைக் கருவியை, தத்தம் வாகனங்களில் பொருத்த வேண்டும்.
இதனைப் பொருத்துவதற்கு 180 - 400 டொலர்கள் வரை செலவாகும் என்பதுடன் மாதாந்தம் 100 - 200 டொலர்கள் பராமரிப்புச் செலவும் ஏற்படும்.
வெறுமனே பெரியதொகை தண்டப்பணங்களை அறவிடுவதுடன் மட்டும் நின்றுவிடாமல், இப்படியான நடைமுறைகளை அமுல்படுத்துவதானது வீதி ஒழுங்கை நிலைநிறுத்துவதற்குப் பெரிதும் உதவும் என விக்டோரியா மாநில அரசு தெரிவித்துள்ளது.
