SKIP TO MAIN CONTENT

குடிபெயர்ந்தே ஆகவேண்டும் என்றால் ஆஸ்திரேலியர்கள் எந்த நாட்டை தேர்ந்தெடுப்பர்?

இன்னொரு நாட்டில் குடிபெயர்ந்தே ஆகவேண்டும் என்றால் ஆஸ்திரேலிய மக்கள் எந்த நாட்டை தெரிவு செய்வார்கள்?

Australians
Source: Getty images

2 min read

Published

By Raysel

Source: ABC Australia


Skip to article content

“சொர்க்கமே என்றாலும் நம் ஊர் போல் வருமா?” என்று நம்மில் சிலர் கூறுவதுபோலவே “ஆஸ்திரேலியாவே உலகில் மிகச் சிறந்த நாடு” என்று ஆஸ்திரேலிய குடிமக்களில் பெரும்பாலானவர்கள் கருதுகின்றனர். ABC ஊடகம் நடத்திய கருத்துக் கணிப்பு இதை உறுதி செய்கிறது.  

அதே வேளையில், “ஒருவேளை இன்னொரு நாட்டுக்கு நீங்கள் குடிபெயர்ந்தே ஆகவேண்டும் என்ற நிர்ப்பந்தம்  ஏற்பட்டால் எந்த நாட்டில் குடியேற விரும்புவீர்கள்?” என்ற கேள்வி முன்வைக்கப்பட்டது.      

கருத்து கூறிய ஆஸ்திரேலியர்களில் நான்கில் ஒருவர் தெரிவு செய்திருக்கும் நாடு – நியூசிலாந்து!

மிக அருகாமையில் இருக்கும், வளர்ச்சியடைந்த, ஆஸ்திரேலியாவுடன் ஓரளவு ஒத்த பண்பாட்டுக் கூறுகளைக் கொண்ட நியூசிலாந்து நாட்டை அதிகமான ஆஸ்திரேலிய மக்கள் தெரிவு செய்வதில் வியப்பில்லை என்று அந்த கருத்து கணிப்பாளர்கள் கூறுகின்றனர்.  

ஆனால் தங்களின் பூர்வீக தாயகம் என்று பல ஆஸ்திரேலியர்கள் கருத்தும் இங்கிலாந்துக்கு குடியேற விரும்பும் எண்ணிக்கை வெறும் 8% மட்டுமே. அதே வேளையில் ஆங்கிலம் பேசும் ஒத்த கலாச்சார விழுமியங்களைக் கொண்ட கனடா நாட்டில் குடியேறுவோம் என்று 15% பேர் கருத்து வெளியிட்டுள்ளனர். உலகின் மிக வலிமையான நாடான அமெரிக்காவில் குடியேற வெறும் 6% மட்டுமே விரும்புகின்றனர்.

இன்னொரு நாட்டுக்கு குடிபெயர்ந்தே ஆகவேண்டும் என்ற நிலைமை ஏற்பட்டால் குடியேற விரும்பும் நாடுகளில் ஆசிய நாடுகளில் ஒரே ஒரு நாட்டை மட்டுமே ஆஸ்திரேலியர்கள் தெரிவு செய்துள்ளனர். அது ஜப்பான். 3 சத ஆஸ்திரேலியர்கள் ஜப்பானை தெரிவு செய்துள்ளனர்.

முதல் 10 நாடுகளின் வரிசை பட்டியலை பாருங்களேன்.

New Zealand - 28%

Canada -15%

England - 8%

United States of America - 6%

France - 3%

Japan - 3%

Italy - 3%

Sweden - 2%

Norway - 2%

Denmark - 2%


Follow SBS Tamil

Download our apps

Watch on SBS

Tamil News

Stream now