ஆஸ்திரேலிய குடியுரிமையை பெற்றுக்கொள்வதற்கான பிரதான தகுதிகளில் ஒன்றாக கடின ஆங்கிலப்பரீட்சையை அறிமுகம் செய்யப்போவதாக லிபரல் கூட்டணி அரசு முன்னர் வெளியிட்ட அறிவிப்பிலிருந்து சற்று பின்வாங்கியிருப்பதாக தெரியவருகிறது.
குடியுரிமையை பெற்றுக்கொள்வதற்காக ஆங்கிலமொழிப்புலமையை நிரூபிக்குமாறு கோருவதன் மூலம் அதிக அழுத்தத்தினை ஏற்படுத்துவது குடிவரவளாளர்களுக்கு எதிராக பாகுபாட்டை கடைப்பிடிப்பதாக முடியும் என்று சமூக தலைவர்கள் முதல் பல தரப்புக்களிலிலும் தெரிவிக்கப்பட்ட அதிருப்தியை அடுத்து அரசு இந்த முடிவை எடுத்திருப்பதாக தெரிகிறது என்று couriermail செய்தி தெரிவித்துள்ளது.
ஆஸ்திரேலிய குடியுரிமையை பெற்றுக்கொள்வதற்கான பரீட்சையில் பல மாற்றங்களை கொண்டுவரப்போவதாகவும் குடிவரவாளர்களுக்கான சிறப்பு ஆங்கில பரீட்சையில் உயர் சித்தியைப்பெறவேண்டும் என்றும் ஆஸ்திரேலியாவின் விழுமியங்கள் தொடர்பான அறிவுத்திறனை கொண்டிருக்கவேண்டும் என்றும் கொண்டுவரவிருக்கின்ற புதிய மாற்றங்கள் குறித்து அரசு முன்னர் தெரிவித்திருந்தது.
ஆனால், இந்த மாற்றங்கள் குடிவரவாளர்களின் மீதான பாகுபாட்டை கடைப்பிடிக்கும் அணுகுமுறையாக அமையும் என்றும் பல் கலாச்சார நாடொன்றில் இவ்வாறான அணுகுமுறை ஆரோக்கியமாக அமையாது என்றும் பலதரப்பிலிருந்தும் தெரிவிக்கப்பட்டதையடுத்து இந்த முடிவில் அரசு நெகிழ்ச்சிப்போக்கை கடைப்பிடிக்கப்போவதாக தெரிகிறது.
Share
