SKIP TO MAIN CONTENT

குடியுரிமை விண்ணப்ப பரிசீலனை மந்தகதியில் நடைபெறுவதற்கான காரணங்கள் இவை!

citizenship
Source: AAP

1 min read

Published

Presented by Renuka


Skip to article content

ஆஸ்திரேலிய குடியுரிமைக்காக விண்ணப்பித்த ஒருவர்  அதற்காக காத்திருக்க வேண்டிய காலப்பகுதி தொடர்ந்தும் அதிகரித்துச் செல்வது தொடர்பில் குடியுரிமை மற்றும் பல்கலாச்சார விவகாரங்களுக்கான அமைச்சர் Alan Tudge விளக்கமளித்துள்ளார்.

தற்போதைய நிலவரப்படி குடியுரிமை விண்ணப்பங்கள் 14 தொடக்கம் 17 மாத காலப்பகுதிக்குள் பரிசீலனைக்குட்படுத்தப்படுவதாக குறிப்பிட்டுள்ள அமைச்சர் Alan Tudge, குடியுரிமை விண்ணப்பங்கள் பரிசீலிக்கப்படுவதில் நிலவும் தாமதத்திற்கு கீழ்க்காணும் 3 காரணங்களை பட்டியலிட்டுள்ளார்.

  • 2010 தொடக்கம் 2018 க்கு இடைப்பட்ட காலப்பகுதியில் குடியுரிமைக்காக விண்ணப்பிப்பவர்களின் எண்ணிக்கை மும்மடங்காகியுள்ளது.
  • முன்னெப்போதும் இல்லாதவகையில் தேசிய பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் நிலவுவதால், விண்ணப்பங்கள் அனைத்தும்  கடுமையான பாதுகாப்பு விதிகளின் கீழ் பரிசீலிக்கப்படும் அதேநேரம் விண்ணப்பதாரியின் அடையாளத்தை உறுதிப்படுத்துவதில் பல சிக்கல்கள் காணப்படுகின்றன.
  • லேபர் ஆட்சிக்காலத்தில் படகுமூலம் வந்து அகதி தஞ்சம் கோரிய சுமார் 50 ஆயிரம் பேரில், நிரந்தர வதிவிட உரிமை கிடைத்த பலர் தற்போது குடியுரிமைக்கு விண்ணப்பித்துள்ளதால், அவர்களது விண்ணப்பங்களை பரிசீலிப்பதற்கு கூடுதல் காலமும் ஆளணி வளங்களும் தேவைப்படுகிறது. இது ஏனையவர்களின் விண்ணப்பங்களைப் பாதிக்கிறது.

மேற்குறிப்பிட்ட காரணங்களால் குடியுரிமை விண்ணப்ப பரிசீலனை தாமதமாகிறது என்பதை அனைவரும் புரிந்துகொள்ள வேண்டுமெனக் கோரியுள்ள அமைச்சர் Alan Tudge, இயன்றவரை இச்செயற்பாட்டில் நிலவும் தாமதத்தை நிவர்த்தி செய்வதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுவருவதாக தெரிவித்துள்ளார்.


Follow SBS Tamil

Download our apps

Watch on SBS

Tamil News

Stream now