ஆஸ்திரேலியாவில் ஜூலை மாதம் 2 ஆம் தேதி நடைபெற்ற நாடாளுமன்றத் தேர்தலில் ஒரு முறை மட்டுமே வாக்களிப்பதற்குப் பதிலாக பலமுறை வாக்களைத்தவர்களின் எண்ணிக்கை 18,343 ஆக உயர்ந்துள்ளது. ஒரு முறைக்கு மேலாக வாக்களித்தால் $10,800 டாலர் அபராதம் அல்லது ஒரு ஆண்டு சிறைத்தண்டனை என்று நாட்டில் சட்டம் இருந்தாலும், பலர் ஒரு முறைக்கும அதிகமாக வாக்களித்திருப்பதாக தேர்தல் திணைக்கள ஆணையாளர் Australian Electoral Commissioner Tom Rogers நாடாளுமன்றக் குழுவிடம் கூறினார். இருவர் பதினொரு முறையும், ஒருவர் ஐந்து முறையும் என்று ஒன்றுக்கும் அதிகமான முறையில் வாக்களித்துள்ளனர். 2013 நடந்த தேர்தலில் இப்படி “கள்ள ஒட்டு” போட்டவர்களின் பெயர்களை தேர்தல் திணைக்களம் போலீசாரிடம் அளித்தபோது, அவர்கல் குறித்து போலீசார் விசாரணை நடத்தியபோதிலும் கடந்த முறை யாருக்கும் தண்டனை கிடைக்கவில்லை.
கள்ள ஓட்டுப் போட்டவர்கள் 18,000 பேர்!
ஆஸ்திரேலியாவில் நாடாளுமன்றத் தேர்தலில் கள்ள ஓட்டுப் போட்டவர்கள் 18,000 பேர்!

1 min read
Published
By Raymond Selvaraj
Source: Fairfax Media
Skip to article content
Share this with family and friends
Share