சிட்னி Mona Vale வீதியில் நேற்று முன்தினம் இடம்பெற்ற கார் விபத்தில் மரணமடைந்தவர், இந்தியாவைச் சேர்ந்த 27 வயதான Akanksha Kadam என தெரிவிக்கப்படுகின்றது.
மாணவர் விசாவில் இங்கு தங்கியிருக்கும் அவர், உணவகம் ஒன்றில் வேலை செய்துவிட்டு, தன்னுடன் பணிபுரியும் இந்திய நண்பர்களுடன் காரில் வீடு திரும்பிக்கொண்டிருந்த போது விபத்து சம்பவித்துள்ளது.
குறித்த காரின் பின் இருக்கையில் Akanksha Kadam அமர்ந்திருந்ததாகவும், மரம் ஒன்றுடன் மோதி கார் விபத்துக்குள்ளானபோது சம்பவ இடத்திலேயே அவர் உயிரிழந்ததாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இக்காரில் பயணம் செய்த மேலும் இருவர் ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் சிகிச்சைபெற்று வருகின்ற அதேநேரம், காரை ஓட்டிச்சென்ற 23 வயது சச்சின் என்ற நபர் மீது பல பிரிவுகளின்கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டு விசாரணை நடைபெறுகிறது.
