கல்வித்தகுதி குறைவானவர்களுக்கு மாரடைப்பு வரும் வாய்ப்பு இருமடங்கு உண்டு என்று சொன்னால், என்னடா இது புதுக்கதை என்று எண்ணத் தோன்றும். ஆனால் கல்வித் தகுதி குறையக் குறைய மாரடைப்பு Heart Attack அல்லது ஸ்ட்ரோக் வரும் வாய்ப்பு அதிகம் என்று ஆய்வு அறிக்கை தெரிவிக்கிறது.
ஆஸ்திரேலியாவின் New South Wales மாநிலத்தில் 45 வயத்துக்கும் மேலான ஆண்கள் பெண்கள் என்று 276,000 பேரின் உடல் நலத்தை கடந்த ஐந்து ஆண்டுகளாக ஆராய்ந்த Dr Rosemary Korda இந்த முடிவை அறிவித்துள்ளார். The Sax Institute இன் 45 and Up எனும் ஆராய்ச்சி இந்த முடிவை எட்டியுள்ளதை International Journal for Equity in Health எனும் அறிவியல் சஞ்சிகை வெளியிட்டுள்ளது.
படிப்புக்கும் உடல் நோய்க்கும் என்ன சம்பந்தம்?
படிப்பு கல்வித் தகுதி அதிகம் இருப்பவர்கள் அதிக சம்பளம் பெறுகின்றனர்; அவர்கள் உடல் நலத்தை பேணும் வகையில் புகை பிடிப்பதில்லை; மதுவை அளவுக்கதிகமாக அருந்துவதில்லை; உடற்பயிற்சியில் அதிக கவனம் செலுத்துவர்; அதற்காக காசு செலவழிப்பர்; உடல் நலனில் அதிக அக்கறை கொண்டிருப்பர்; மருத்துவரை அதிகம் சென்று பார்ப்பர்; எனவே அவர்களுக்கு மாரடைப்பு Heart Attack அல்லது ஸ்ட்ரோக் வரும் வாய்ப்பு குறைவு என்று அந்த ஆய்வு முடிவு தெரிவிக்கிறது.
Share
