இந்தியளவில் நடைபெற்ற தேர்லில் ஒவ்வொரு கட்சிகளாலும் உள்வாங்கப்பட்ட பிரபலங்கள் பாரபட்சமில்லாமல் வெற்றியையும் தோல்வியையும் பெற்றிருக்கின்றனர்.
இவர்களில் சிலர் போட்டியிட்ட தொகுதி வாக்குகள் இன்னமும் முழுமையாக எண்ணி முடிக்கப்படாத நிலையிலும் கிட்டத்தட்ட வெற்றி ஊர்ஜிதமான தகவல்கள் வெளியாகத்தொடங்கியிருக்கின்றன. அவர்களில் சிலரது விவரம் வருமாறு -
"இந்தியன்" மற்றும் “ரங்கீலா” புகழ் நடிகை - காங்கிரஸ் வேட்பாளர் - ஊர்மிளா வடக்கு மும்பாயில் படுதோல்வி
காங்கிரஸ் வேட்பாளரும் வசந்த் அன். கோ முதலாளியுமான வசந்தகுமார் (Congress) அபார வெற்றி. எதிர்த்துப்போட்டியிட்ட பி.ஜே.பி. முக்கியஸ்தர்களில் ஒருவரான பொன். ராதாகிருஷ்ணனை தோற்கடித்துள்ளார்.
"சலங்கை ஒலி" புகழ் ஜெயப்பிரதா (BJP) உத்தரபிரதேச ராம்பூர் தொகுதியில் தோல்வி.
YSR காங்கிரஸில் போட்யிட்ட நடிகை ரோஜா ஆந்திர மாநிலம் நகரி சட்டமன்ற தொகுதியில் வெற்றி!
பா.ஜ.கவின் கீழ் கிழக்கு டில்லியில்போட்யிட்ட முன்னாள் கிரிக்கெட் அணி வீரர் கௌதம் கம்பீர் சுமார் ஆறுலட்சம் விருப்பு வாக்குகளைப்பெற்று அபார வெற்றி.
தமிழிச்சி தங்கபாண்டியன் வெற்றிபெற்றுள்ள தென் சென்னையில் போட்டியிட்ட நடிகர் பவர் ஸ்டார் சிறினிவாஸன் 670 மாத்திரம் பெற்று படுதோல்வி.
பா.ஜ.க.வில் போட்டியிட்ட நடிகை ஹேம மாலினி சுமார் ஆறு லட்சத்து எழுபதினாயிரம் வாக்குகளுடன் வெற்றிப்பாதையில்.
திண்டுக்கல்லில் 'நாம் தமிழர்" கட்சி சார்பில் போட்டியிட்டு தோல்வியடைந்தபோதும் நடிகர் மன்சூர் அலிகான் பெற்ற வாக்குகளின் எண்ணிக்கை 52271.
பெங்களுர் மத்தியில் சுயேட்சை வேட்பாளராக போட்டியிட்ட நடிகர் பிரகாஷ்ராஜ் 28 ஆயிரம் வாக்களவில் பெற்று மூன்றாம் இடத்துக்கு தள்ளப்பட்டார்.
