SKIP TO MAIN CONTENT

கலப்பட எச்சரிக்கை: பால் வகைகள் திரும்பப்பெறப்படுகின்றன!

milk recall
Eight milk varieties sold in Victoria and some NSW towns were recalled over contamination fears. Source: AAP

2 min read

Published

Updated

Presented by Renuka


Skip to article content

விக்டோரியா - நியூ சவுத் வேல்ஸ் மாநிலங்களில் விற்கப்படும் குறிப்பிட்ட சில பால் வகைகளில் சுத்திகரிப்பு திரவம் கலந்திருக்கலாம் என்பதால்  8 வகையான பால் வகைகள் திரும்பப்பெறப்படுவதாகவும் பால் கொள்முதல் செய்யும்போது கவனம் செலுத்துமாறும் பொதுமக்களுக்கு அறிவித்தல் விடுக்கப்பட்டுள்ளது.

இரண்டு மாநிலங்களிலும் உள்ள Coles, Woolworths, IGA உள்ளிட்ட பிரபல அங்காடிகள் மற்றும் எனைய இடங்களில் விற்பனையாகும்  பால் வகைகள் தொடர்பிலேயே இந்த அறிவிப்பு விடுக்கப்பட்டுள்ளது.

சுத்திகரிப்பு திரவம் கலந்துள்ளதாக நம்பப்படும் இந்தப்பால் மஞ்சள் நிறமாக தெரியும் அல்லது இராசயன மணம் ஏற்படும் என்றும் இந்த அறிவிப்பில் எச்சரிக்கப்பட்டிருக்கிறது.

ஜூன் 25 முதல் ஜூன் 28 வரையான காலாவதியை கொண்ட கீழுள்ள பால் வகைகள் தொடர்பில் இந்த எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. 

• Coles Full Cream Milk 1L Bottle (use by date: 25 and 26 June 2019)

• Coles Low Fat Milk 1L Bottle (use by date: 25 and 26 June 2019)

• Coles Skim Milk 1L Bottle (use by date: 25 June 2019)

• Pauls Full Cream Milk 1L Bottle (use by date: 26 and 27 June 2019)

• Pauls Smarter White Milk 1L Bottle (use by date: 25, 26 and 27 June 2019)

• REV 1L Bottle (use by date: 28 June 2019)

• PhysiCAL Low Fat 1L Bottle (use by date: 26 June 2019)

• PhysiCAL Skim 1L Bottle (use by date: 27 June 2019)

Source: Lactalis Australia


Follow SBS Tamil

Download our apps

Watch on SBS

Tamil News

Stream now