'கண்ணை பார்க்காமல் மார்பைப் பார்த்து பேசினார்'-சக ஊழியர் மீது பாலியல் குற்றச்சாட்டு

Women with her hand up. 'Stop'

Source: Insight

வேலைத்தளத்தில் பெண் ஊழியர் ஒருவரின் கண்களை பார்த்துப்பேசாமல் அவரது மார்பகங்களை பார்த்து அவரது சக ஆண் ஊழியர் பேசினார் என்று மேற்கொள்ளப்பட்ட பாலியல் துஷ்பிரயோக முறைப்பாட்டில், அவர் ஒரு பெண் என்ற காரணத்துக்காக பாகுபாட்டுடன் நடத்தப்பட்டிருக்கிறார் என்றும் அதன் தொடர்ச்சியாக அவருக்கு அநீதி இழைக்கப்பட்டிருக்கிறது என்றும் விக்டோரிய பொதுமக்கள் நிர்வாக முறைப்பாட்டு ஆணையகம் (Victorian Civil and Administrative Tribunal) தெரிவித்துள்ளது.

தனக்கு ஏற்பட்ட அநீதிக்கு வேலைத்தளம் நட்ட ஈடு வழங்கவேண்டும் என்று பாதிக்கப்பட்ட பெண் முன்வைத்துள்ள கோரிக்கை தொடர்பில் குறிப்பிட்ட வேலைத்தளத்தின் சார்பிலான கருத்துக்களை முன்வைக்குமாறும் ஆணையகம் அறிவித்திருக்கிறது.

இந்த விவகாரம் தொடர்பாக The Age பத்திரிகை வெளியிட்டுள்ள முமுமையான செய்தி வருமாறு -

Melbourne Campbellfield பகுதியிலுள்ள பாண் மற்றும் பீட்ஸா தயாரிக்கும்  கடையில் வேலைசெய்த குமாரி  என்ற பெண் தனது சக ஆண் பணியாளர் முனீர்  தனது கண்களை பார்த்து பேசாமல் மார்பகங்களை பார்த்து பேசுகிறார் என்றும் இதனால் தர்மசங்கடமாக உணர்வதாகவும்  குறிப்பிட்ட ஆண் ஊழியரிடமே எடுத்துக்கூறியிருக்கிறார்.

இந்த சம்பவம் கடந்த 2017 ஆம் ஆண்டு ஒகஸ்ட் 11 ஆம் திகதி இடம்பெற்றதாக ஆணையகத்திடம் முன்வைத்த முறைப்பாட்டில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதற்கு, குறிப்பிட்ட ஆண் ஊழியர் முனீர் கோபத்துடன் பதிலளித்திருக்கிறார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த சம்பவத்தை குமாரி கடை முகாமையாளரிடம் முறையிட்டிருக்கிறார். முறைப்பாட்டை தான் நம்பவில்லை என்று முகாமையாளர் கூறிவிட்டார்.

அதன் பின்னர், கடையின் நிர்வாக இயக்குனருடன் சந்திப்பு ஒழுங்கு செய்யப்பட்டது. அந்த சந்திப்பின்போது, சீருடை அணிந்திருக்கும்போது அப்படி எவ்வாறு பார்க்கமுடியும் என்று நிர்வாக இயக்குனர் கேட்டிருக்கிறார். கூடவே, விடுப்பில் செல்லுமாறும் குமாரி கோரப்பட்டிருக்கிறார். ஆனால், முனீர் அவ்வாறு விடுப்பில் செல்லக்கோரப்படவில்லை.

அதன்பின்னர், குமாரி  கடையின் வேறோரு பகுதியில் வேலைசெய்வதற்கு இடமாற்றம் செய்யப்பட்டிருந்தார். ஆனால், மீண்டும் பழைய இடத்திலேயே வேலை செய்யவிரும்புவதாக குமாரி  கூறியிருக்கிறார். அதன்பிறகு, வேலைக்கு அவர் போகவில்லை.

2018 ஆம் ஆண்டு ஜனவரி 7 ஆம் திகதி, குமாரி ஒட்டுமொத்த விவகாரத்தையும் Fair Work Commission முன்னிலையில் முறைப்பாடாக கொண்டுசென்றார். அந்த முறைப்பாட்டில் தனது பணியிட முகாமையாளர், தனக்கு இந்தியர்கள் என்றாலே பிடிக்காது என்று கூறியதாகவும் குமாரி குறிப்பிட்டிருந்தார்.

2018 ஆம் ஆண்டு பெப்ரவரி 8 ஆம் திகதி, குமாரி குறிப்பிட்ட வேலையிலிருந்து நீக்கப்பட்டார்.

இந்த முழு விவரங்களை கேட்டறிந்த ஆணையகம் குமாரிக்கு அநீதி இழைக்கப்பட்டிருக்கிறது என்றும் அவருக்கான உரிமை மறுக்கப்பட்டிருக்கிறது என்றும் தெரிவித்திருக்கிறது.


2 min read

Published

Updated



Share this with family and friends


Follow SBS Tamil

Download our apps

Watch on SBS

Tamil News

Watch now