SKIP TO MAIN CONTENT

கனடாவில் அகதி அந்தஸ்து பெற்ற ஆஸ்திரேலியர்!

Image of Stevan Utah, who won the landmark case in Canada
Source: ABC Australia

1 min read

Published

Updated

Presented by Renuka


Skip to article content

Bandidos bikie gang என்ற மோட்டார் சைக்கிள் குழு குறித்த தகவல்களை, அவர்களோடு சேர்ந்து இயங்கியவாறு வெளிக்கொண்டுவந்த Stevan Utah என்ற ஆஸ்திரேலியருக்கு, கனடாவில் அகதி அந்தஸ்து வழங்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

குறித்த நபர் கடந்த 2006-ம் ஆண்டு மோட்டார் சைக்கிள் குழுக்களுக்கு எதிராக மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கையின்போது, ஆஸ்திரேலிய குற்றத்தடுப்பு ஆணைக்குழுவின் இரகசிய உளவாளியாக செயற்பட்டு அக்குழுவில் இருந்தபடி தகவல் வழங்கியமைக்காக, அவருக்கு ஆஸ்திரேலியாவில் உயிராபத்து இருப்பது உறுதிசெய்யப்பட்டதையடுத்து கனடாவில் அகதி அந்தஸ்து வழங்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

ஆஸ்திரேலிய குற்றத்தடுப்பு ஆணைக்குழுவின் இரகசிய உளவாளியாக செயற்பட்டமை, Bandidos bikie gang –க்கு தெரியவந்ததையடுத்து, அக்குழு தன்னை குயின்ஸ்லாந்தில் வைத்து கொலை செய்ய முயன்றதாக தெரிவித்து Stevan Utah நாட்டைவிட்டு வெளியேறி கனடாவில் தஞ்சம்புகுந்திருந்தமை குறிப்பிடத்தக்கது.


Follow SBS Tamil

Download our apps

Watch on SBS

Tamil News

Stream now