SKIP TO MAIN CONTENT

கர்ப்பிணியின் அறுவை சிகிச்சையின்போது சண்டையிட்ட மருத்துவர்கள்!

Doctors
Two doctors at an Indian hospital have been filmed having an altercation while performing a surgery. Source: Facebook

1 min read

Published


Skip to article content

இந்தியா ராஜஸ்தான் மாநிலத்திலுள்ள மருத்துவமனையில் கர்ப்பிணி ஒருவரின் அறுவை சிகிச்சையின்போது இரு மருத்துவர்களுக்கு இடையில் வாக்குவாதம் ஏற்பட்டதை அங்கிருந்த ஒருவர் பதிவுசெய்து இணையத்தில் வெளியிட்டுள்ளார்.

குறித்த கர்ப்பிணிப் பெண் அறுவை சிகிச்சைக்கு முன் சாப்பிட்டாரா என்பது தொடர்பில் அறுவை சிகிச்சை அறையில் இரண்டு மருத்துவர்கள் இடையே வார்த்தை மோதல் ஏற்பட்டதாக சொல்லப்படுகிறது.

இதைத் தொடர்ந்து அந்தப் பெண் பெற்றெடுத்த குழந்தை இறந்துவிட்டதாக கூறப்பட்டது.

எனினும் இதனை நிராகரித்துள்ள மருத்துவமனை தரப்பு குறித்த பெண்ணும் அவருக்குப் பிறந்த குழந்தையும் நலமாய் இருப்பதாகத் தெரிவித்துள்ளது.

தற்போது அந்த இரு மருத்துவர்களும் பணியிலிருந்து தற்காலிகமாய் ஓய்வெடுத்திருப்பதாகவும்  இச்சம்பவம் தொடர்பில் விசாரணை நடப்பதாகவும் மூத்த மருத்துவர்கள் கூறியுள்ளனர்.

எனினும் நோயாளியை முறையாகக் கவனிக்காமல் சண்டை போட்ட மருத்துவர்களை சமூக ஊடகங்களில் பலரும் கண்டித்து கருத்துகளை வெளியிட்டு வருகின்றனர்.

 


Follow SBS Tamil

Download our apps

Watch on SBS

Tamil News

Stream now