Fairfax-Ipsos வெளியிட்டுள்ள கருத்துக்கணிப்பு முடிவுகளின்படி எதிர்கட்சியான லேபர்கட்சி இருகட்சி விருப்பு அடிப்படையில் ஆளும் கூட்டணி அரசை விடவும் 52-48 என முன்னிலை வகிக்கிறது.
ஆனால் கடந்த மாத கருத்துக்கணிப்பில் 55-45 என லேபர் கட்சி முன்னிலை வகித்திருந்தநிலையில் இம்முறை ஆளுங்கட்சிக்கான மக்கள் ஆதரவு 3 புள்ளிகளால் அதிகரித்துள்ளது.
மக்களின் விருப்பத்திற்குரிய பிரதமராக Scott Morrison அவர்கள் எதிர்கட்சித் தலைவர் Bill Shorten-ஐ விடவும் 47-35 என தொடர்ந்தும் முன்னிலை வகிக்கின்றார்.
இதேவேளை இக்கருத்துக்கணிப்பில் பங்கேற்ற 46 வீதமானவர்கள் முஸ்லிம்நாடுகளிலிருந்து ஆஸ்திரேலியாவுக்குள் உள்வாங்கப்படுபவர்களின் எண்ணிக்கையை குறைக்க வேண்டுமென தெரிவித்துள்ள அதேநேரம் 35 வீதமானவர்கள் இந்த எண்ணிக்கையை கூட்டவோ குறைக்கவோ தேவையில்லை என குறிப்பிட்டுள்ளனர்.
