SKIP TO MAIN CONTENT

கருத்துக்கணிப்பு: சரியத்தொடங்கும் லிபரலின் செல்வாக்கு!

Opposition Leader Anthony Albanese speaks to PM Scott Morrison
डढेलो सङ्कटलाई लिएर राज्य र सङ्घीय सरकारहरूको परिषद् कोयागको छलफल राख्नु पर्ने विपक्षी नेता अल्बनिजीको भनाइ Source: AAP

1 min read

Published

Updated

Presented by Renuka


Skip to article content

ஆஸ்திரேலிய தேர்தல்  நடைபெற்று முடிந்து மூன்று மாதங்கள் நிறைவடைந்துள்ள நிலையில் லிபரல் கட்சியின் செல்வாக்கு நாட்டு மக்கள் மத்தியில் சரிவடையத்தொடங்கியிருப்பதாக கருத்துக்கணிப்பு விவரங்கள் தெரிவித்திருக்கின்றன.

லிபரலின் நிலை இவ்வாறிருக்க லேபருக்கான மக்களாதரவு படிப்படியாக அதிகரித்துவருவதாகவும் அந்தக்கருத்துக்கணிப்பு தெரிவித்துள்ளது.

கடந்த மே மாதம் நடைபெற்ற தேர்தலில் இமாலய வெற்றியை சுவீகரித்துக்கொண்ட லிபரல் கட்சியின் செல்வாக்கு லேபருடன் ஒப்பிடும்போது கடந்த ஜூலை மாதம் 53 - 47 என்ற ரீதியில் காணப்பட்டது.

ஆனால், தற்போது The Australian நிறுவனம் நடத்தியுள்ள மக்கள் கருத்துக்கணிப்பில் லிபரருக்கான மக்களாதரவு லேபருடன் ஒப்பிடும்போது 51 - 49 என்கின்ற ரீதியில் உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஆனால், நாட்டு மக்களின் விருப்பத்துக்குரிய பிரதமராக தொடர்ந்தும் Scott Morrison காணப்படுகிறார் என்றும் எதிர்க்கட்சித்தலைவர் Anthony Albanese-உடனான அவரது செல்வாக்கு விகிதம் 48-30 என்கின்ற ரீதியில் காணப்படுவதாகவும் The Australian கருத்துக்கணிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


Follow SBS Tamil

Download our apps

Watch on SBS

Tamil News

Stream now