பெடரல் தேர்தலுக்கு இன்னும் ஒரு மாதமே உள்ளநிலையில் The Australian இன்று வெளியிட்டுள்ள கருத்துக்கணிப்பு முடிவுகளின்படி எதிர்கட்சியான லேபர்கட்சி இருகட்சி விருப்பு அடிப்படையில் ஆளும் கூட்டணி அரசைப் பின்தள்ளி 52 க்கு 48 என தொடர்ந்தும் முன்னிலை வகிக்கிறது.
மேலும் எதிர்கட்சியினதும் கூட்டணி அரசினதும் முதன்மை வாக்குகள் 39-39 என சரிசமமாக காணப்படுகின்றது.
மக்களின் விருப்பத்திற்குரிய பிரதமராக Scott Morrison அவர்கள் எதிர்கட்சித் தலைவர் Bill Shorten-ஐ விடவும் 46-35 என தொடர்ந்தும் முன்னிலை வகிக்கின்றார்.
இதேவேளை இம்முறை கருத்துக்கணிப்பில் One Nation கட்சிக்கு பின்னடைவு எற்பட்டுள்ளது. One Nation கட்சிக்கான முதன்மை வாக்குகள் 4 வீதத்தால் சரிவடைந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
