SKIP TO MAIN CONTENT

கருத்துக்கணிப்பு: பிரதமர் Turnbull-க்கு மக்கள் செல்வாக்கு சடுதியாக அதிகரிப்பு

Opposition Leader Bill Shorten standing next to PM Malcolm Turnbull.
Bill Shorten and Malcolm Turnbull Source: AAP

1 min read

Published

Updated

Presented by Renuka


Skip to article content

The Australian இன்று வெளியிட்டுள்ள கருத்துக்கணிப்பு முடிவுகளின்படி, மக்களின் விருப்பத்திற்குரிய பிரதமராக Malcolm Turnbull , எதிர்கட்சித் தலைவர் Bill Shorten-ஐ விடவும் 46-32 என அதிக முன்னிலை பெற்றுள்ளார்.

கடந்தவாரம் நிதிநிலை அறிக்கை சமர்ப்பிக்கப்பட்டிருந்த அதேநேரம் இரட்டைக் குடியுரிமை விவகாரத்தில் லேபர் கட்சியின் 4 நாடாளுமன்ற உறுப்பினர்கள்  பதவிவிலகியிருந்த பின்னணியில், பிரதமர் Malcolm Turnbull-க்கான மக்கள் செல்வாக்கு, 8 புள்ளிகளால் சடுதியாக அதிகரித்துள்ளது.

கடந்த 2016 செப்டம்பரின் பின்னர் வெளியான கருத்துக்கணிப்புக்களில் பிரதமருக்கு மிகவும் சாதகமாக அமைந்துள்ள கருத்துக்கணிப்பு இதுவாகும்.

எதிர்கட்சித் தலைவர் Bill Shorten–க்கான ஆதரவு 3 புள்ளிகளால் குறைவடைந்துள்ளது.

இதேவேளை கடந்த கருத்துக்கணிப்பைப் போலவே இருகட்சி விருப்பு அடிப்படையில் லேபர்கட்சியை விட பிரதமர் Malcolm Turnbull  தலைமையிலான அரசு தொடர்ந்தும் 49-51  என பின்தங்கியுள்ளது.


Follow SBS Tamil

Download our apps

Watch on SBS

Tamil News

Stream now