SKIP TO MAIN CONTENT

கடனட்டை வாடிக்கையாளர்களுக்கு NAB வெளியிட்டுள்ள புதிய அறிவிப்பு!

NAB sign on building
File photo Source: AAP

1 min read

Published

Presented by Renuka


Skip to article content

கடனட்டைகளுக்கு தாமதமாக பணம் செலுத்துபவர்களுக்கு தமது வங்கி அறவிட்டுவரும் தண்டப்பணம் (Late Fee) தொடர்பில் NAB வங்கி புதிய அறிவித்தலை விடுத்துள்ளது.

கடனட்டைகளுக்கு செலுத்தவேண்டிய பணத்தை தாமதமாக செலுத்துபவர்களுக்கு NAB வங்கி தற்போது 15 டொலர் தண்டப்பணத்தை அறவிட்டுவருகிறது. ஆனால், புதிய நடைமுறையின் பிரகாரம், கடந்த 11 தவணைகளில் ஒழுங்காக பணம் செலுத்திவந்த வாடிக்கையாளர்கள் 12 ஆவது மாதம் தாமதமாக பணம் செலுத்தினால் குறிப்பிட்ட 15 டொலர் தண்டபணத்தை அறவிடப்போவதில்லை என்று NAB வங்கி அறிவித்துள்ளது.

இந்த புதிய நடைமுறையை எதிர்வரும் ஜூலை முதலாம் திகதி முதல் அமுலுக்கு கொண்டுவரவுள்ளதாகவும் NAB அறிவித்துள்ளது.

இந்தப்புதிய நடைமுறையின் மூலம் தங்களது வங்கியின் 20 ஆயிரம் வாடிக்கையாளர்கள் பயனடைவார்கள் என்று NAB வங்கி எதிர்பார்க்கிறது.

கடந்த 2015 ஆம் ஆண்டு NAB வங்கியின் கடனட்டை வர்த்தகம் தொடர்பாக மேற்கொள்ளப்பட்ட Royal Commission பரிந்துரையின் பின்னர் வங்கி மேற்கொண்டுள்ள முதலாவது மாற்றம் இதுவாகும்.


Follow SBS Tamil

Download our apps

Watch on SBS

Tamil News

Stream now