கொரோனா வைரஸ் தொற்று உலகின் சகல பகுதிகளையும் ஆக்கிரமித்திருக்கும் இந்தவேளையில் இதயம் மற்றும் நாளங்களில் வீக்கம், தோல் தடித்து வீங்குதல் போன்றவற்றுடனான Kawasaki வியாதியால் சிறுவர்கள் பாதிக்கப்படும் சம்பவங்கள் தமது நாடுகளில் அதிகரித்திருப்பதாக பிரிட்டன் மற்றும் இத்தாலிய மருத்துவர்கள் தெரிவித்துள்ளார்கள்.
இந்த நோய் கொரோனா வைரஸ் தாக்கிய சிறுவர்களை அதிகம் பாதிக்கத்தொடங்கியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றபோதும் கொரோனாவுக்கும் இந்நோயிற்கும் தொடர்புகள் இருப்பதாக இப்போதைக்கு உறுதிசெய்யப்படவில்லை என்று மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.
கடும் காய்ச்சல், அடிவயிற்றில் நோவும் பிறப்புறுக்களில் வீக்கம் மற்றும் உடலின் ஏனைய பாகங்களில் rash போன்றவை இந்த நோய்க்கான அறிகுறிகளாக பல சிறுவர்களிடம் அவதானிக்கப்பட்டிருக்கின்றன.
கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளான சிறுவர்களுக்கு அதிகம் பரவுகின்ற இந்த நோய் அறிகுறிகள் இதயத்தில் வீக்கத்தை ஏற்படுத்துவதாகவும் மருத்துவர்கள் கண்டறிந்துள்ளனர்.
கொரோனா வைரஸ் தொற்றினால் ஏற்படுகின்ற பக்க விளைவுகள்தான் அந்தநோயா அல்லது இந்த நோய் ஏன் சிறுவர்களை மாத்திரம் கூடுதலாக தாக்குகிறது என்பது தொடர்பாக மருத்துவர்கள் ஆராய்ச்சி செய்துவருகிறார்கள்.