SKIP TO MAIN CONTENT

‘புத்தி கூர்மையுடன் இருங்கள்’ அல்லது ‘அறிவின் தீட்சண்யத்துடன் இருங்கள்’

Keep Sharp - Sanjay Gupta நூலின் சில பகுதிகள் தமிழில்

Twitter(Sanjay Gupta)
Source: Twitter(Sanjay Gupta)

5 min read

Published

Updated

By R.Sathiyanathan


Skip to article content

சஞ்சய் குப்தா - டாக்டர் சஞ்சய்குப்தா, இந்திய வம்சாவளி அமெரிக்கர். உலகப்புகழ்பெற்ற Brain surgeon- மூளை அறுவை சிகிச்சை நிபுணர், மட்டுமல்ல பிரபல neurosurgeon. Associate chief of the neurosurgery service Grady Memorial Hospital, Atlanta Georgia. Associate professor of neurosurgery- Emory University of Medicine. வெள்ளை மாளிகையில் ஆலோசகராகப் பணிபுரிந்தவர்.

மருத்துவத்துறையில் மிகப்பெரிய அங்கீகாரம், எனக் கருதப்படுகிற, National Academy of Medicine இல் உள்ள 100 உறுப்பினர்களுள் ஒருவராக தெரிவுசெய்யப்பட்டவர். அதுமட்டுமல்ல, chief medical correspondent for CNN. September 11 இரட்டைக்கோபுரத்தாக்குதல்களின்போதும் ஈராக் யுத்தத்தின்போதும் களத்தில் பணியாற்றியவர். ஈராக் போர்முனையில் காயமடைந்த இராணுவ வீர்ர்களுக்கு களத்திலேயே மூளை அறுவை சிகிச்சை செய்தவர். மருத்துவம் தொடர்பான பல தொலைக்காட்சி அறிக்கைகளுக்காக பல தடவைகள் Emmy விருதுகளைப் பெற்றவர். ஏராளமான தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் பங்குபற்றியவர்; Time சஞ்சிகையில் தொடர்ந்து எழுதிவருபவர். Chasing Life, Cheating Death, Monday Mornings போன்ற நூல்களை எழுதியவர்.

டாக்டர் சஞ்சய் குப்தா எழுதி அண்மையில் வெளிவந்துள்ள நூல்தான் Keep Sharp. இப்போது best seller ஆக இருக்கிறது. Keep Sharp - sharp ஆக இருங்கள்- ‘கூர்மையாக அல்லது தீட்சண்யமாக இருங்கள்’ என்பதே இதன் தமிழாக்கம்.

இவ்வளவு பிரபலமானவர் எழுதி best seller ஆக விற்பனையாகிக்கொண்டிருக்கும் இந்த நூலில் இவர் என்னதான் சொல்லியிருக்க க் கூடும் என்ற ஆவல் காரணமாக இந்த நூலை வாங்கி வாசித்து முடித்தபோது, இதில் உள்ள சில பிரதான தகவல்கள் நம்மில் பலருக்கும் பயனுள்ளதாக இருக்கும் என்ற எண்ணம் மேலோங்கியது. நான் இங்கு முன்வைப்பது டாக்டர் சஞ்சய் குப்தா அவர்கள் அவரது நூலில் அவர் முன்வைத்துள்ள தகவல்கள் மட்டுமே- எனது கருத்துக்கள் அல்ல. பல நூறு பக்கங்கள் கொண்ட அந்த நூலில் இருந்து மிகப்பிரதானமான பகுதிகளின் சாராம்சம் மட்டுமே இங்கு எடுத்துக் கொள்ளப்பட்டிருக்கிறது.

Twitter(Sanjay Gupta)
Source: Twitter(Sanjay Gupta)

“ 50 அல்லது 60 வயதை நெருங்கியவர்களுக்கு ஒரு சந்தேகம் ஏற்படுவதுண்டு.

வீட்டினுள் ஒரு அறைக்குள் போனபின் எதற்காக இந்த அறைக்கு வந்தோம் என்பது மறந்து போவது; கார் சாவிக்கொத்தை எங்கே வைத்தோம் என்பதை மறந்து போவது; மூக்குக் கண்ணாடியை எங்கே வைத்தோம் என்பது மறந்து போவது; நீண்ட நாள் பழகிய நண்பரின் பெயரைத் திடீரென்று மறந்து போவது, இப்படி பல சம்பவங்கள் நிகழும்போது, ‘மறதி நோய் - dimentia வின் அறிகுறிகள் தானோ இவை’ என்பதே ஏற்படும் சந்தேகம் ஆகும். இவை dimentia என்ற மறதி நோயின் அறிகுறிகள் இல்லை.

அதே நேரத்தில் உங்கள் கையில் உள்ள சாவிக்கொத்தில், எந்தச் சாவி வீட்டின் முன் கதவுக்கானது என்பதில் குழப்பம் ஏற்பட்டால்; நீண்ட நாள் பழகிய ஒரு நண்பர், உங்களைக் காண வரும்போது அவரை இதற்கு முன் சந்தித்ததில்லை என்பது போன்ற உணர்வு தோன்றினால்; கடைசியாக எப்போது சாப்பிட்டோம் என்பதை நினைவு படுத்த முடியாவிட்டால்; dimentia என்ற மறதி நோய் உங்களுக்கு ஏற்பட்டிருக்கிறது- இது இன்னும் கடுமையாகும் சாத்தியங்கள் உண்டு என்பதுதான் உண்மை.

நமது உடலில் உள்ள உறுப்புக்களில் இன்னும் சரியாக, முழுமையாக அறிந்துகொள்ளப்படாத உறுப்பு நமது மூளை. நமது ஐம்புலன்களையும் இயக்குவதும் உடலின் எல்லாவகை இயங்கங்களையும் தீர்மானிப்பதும் பிரதான உள் உறுப்புகளை செயல்படவைப்பதும் மூளைதான். சிந்தித்தல், பேசுதல், உணர்தல், பார்த்தல், கேட்டல், நினைவில் வைத்துக்கொள்ளல், நடத்தல் மட்டுமல்ல, நமது சுவாசத்தை நெறிப்படுத்துவதும் மூளைதான். CNS என்ற central nervous system - மத்திய நரம்புத்தொகுதியின் அங்கமாக மூளை இருக்கிறது.

Human Brain
A visual depiction of the human brain. Source: Getty Images/SCIEPRO

இருதய நோய்கள், சுவாசப்பை தொடர்பான நோய்கள், சிறுநீரகம் தொடர்பான நோய்கள், மற்றும் நீரிழிவு, cholesterol, உயர் இரத்த அழுத்தம் போன்ற நோய்கள் தொடர்பாகவும் அதிலிருந்து நம்மைக் காப்பாற்றிக்கொள்ள செய்யவேண்டிய எடுக்கவேண்டிய நடவடிக்கைகள் தொடர்பாகவும் நாம் அறிந்த அளவுக்கு, நமது மூளையின் ஆரோக்யம் தொடர்பாக நாம் தெரிந்து கொள்ளவில்லை. ஏனென்றால் நாம் அடிக்கடி சந்திக்கும் GP உங்கள் மூளை யின் ஆரோக்யம் குறித்து பேசுவதுமில்லை; அதன் தற்போதைய நிலை குறித்து விவாதிப்பதுமில்லை. மூளையின் ஆரோக்கியம் பாதிக்கப்பட்டால், உடலின் மற்றைய தொழிற்பாடுகளும் பாதிக்கப்படும் என்பதும் இதனால் alzheimers என்ற பாதிப்பு ஏற்பட்டு அது dimentia என்ற கடுமையான மறதி நோயாக மாறும் என்பதும் நாம் தெரிந்திருக்கவேண்டிய ஒன்று.

Five pillars of Brain Health- ஆரோக்கியமான மூளையைத் தாங்கி நிற்கும் ஐந்து தூண்கள்.

இந்த ஐந்து தூண்களை 1. Move 2. Discover 3. Relax 4. Nourish 5. Connect - அசைவிலிரு, கண்டுபிடி, தளர்வாக இரு அல்லது ஓய்வெடு, ஊட்டமளி, இணைப்பிலிரு என்று வகைப்படுத்தலாம்.

Move - அசைவிலிரு

Older couple holding hand on beach
Source: Getty Images

மனித உடல் ஓடி, நடமாடித்தரிவதற்கான உறுப்புகளை உடையது. Physical fitness உடல் திறன் என்பது brain fitness என்ற மூளைத்திறனுடன் நேரடியாகவும் வலிமையாவும் தொடர்புடையது. உங்கள் வைத்தியரின் ஆலோசனையுடன் வாரத்திற்கு மூன்று நாட்களாவது ஆகக்குறைந்தது 20 நிமிட உடற்பயிற்சி செய்யுங்கள். தொலைபேசியில் பேசும்போது நடந்துகொண்டே பேசுவது, lift இல் போவதற்கு பதிலாக படியேறிச்செல்வது, போக வேண்டிய இடத்திற்கு சற்று தூரத்தில் வண்டியை நிறுத்திவிட்டு இறங்கி நடந்து செல்வது என்பன நிச்சயம் உதவும். இவையெல்லாவற்றுக்கும் மேலாக, தினமும் வியர்வை ஏற்படக்கூடிய விதமான வேலை ஒன்றில் அல்லது உடற்பயிற்சியொன்றில் ஈடுபடுவது மிகுந்த பலனைத்தரும். What is good for the heart is also good for the brain.

Discover - கண்டுபிடி

Nurse and elderly couple in an Aged Care – Getty Images/Morsa Images
Source: Getty Images/Morsa Images

புதிதாக ஒன்றைக் கற்றுக்கொள்ளுதல் மூளைக்கு புதிய வலுவை ஏற்படுத்தும் என்று ஆய்வுகள் சொல்கின்றன. புதிய திறன் ஒன்றைக் கற்றுக்கொள்வதன்மூலமாக மூளை பயிற்சி பெறுகிறது. இதன் மூலமாக கவனம், focus என்று குவியம், concentration -கவனச்செறிவு என்பன அதிகரிக்கின்றன.

நீங்கள் வலது கைக்காரராக இருந்தால் இடது கையால் சாப்பிடவோ, எழுதவோ, பல்துலக்கவோ முயற்சி செய்யுங்கள்.

உங்களுக்கு ஆர்வமில்லாத விடயம் பற்றி எழுதப்பட்ட புத்தகம் ஒன்றைப் படிக்க ஆரம்பியுங்கள்.

ஓவியம் தீட்டுதல், சங்கீத கருவிகளை வாசித்தல், சமையல் வகுப்பு என்று புதிய ஒன்றைக் கற்றுக்கொள்ளுங்கள். அல்லது பெரியவர்களுக்கான கற்றல் வகுப்பொன்றில் சேருங்கள்.

எழுதுவோர் - writers இணையும் குழுவொன்றில் சேருங்கள்.

புதிய மொழி ஒன்றைக்கற்றுக்கொள்ளுங்கள்.

Relax - ஓய்வெடு

 A study undertaken with more than 2000 participants of all ages and backgrounds, has found 15 per cent of Australians have chronic insomnia.
Source: Supplied

ஓய்வெடுப்பது என்பது உடலுக்கு ஓய்வு கொடுப்பது மட்டுமல்ல. உங்கள் மூளைக்குமானதுதான்.

போதுமான தூக்கமின்மை ஞாபக சக்தியைப் பாதிக்கிறது என்பதற்கு ஏராளமான ஆராய்ச்சிகள் சான்றாக இருக்கின்றன. தூக்கமின்மையால் ஏற்படும் stress மன அழுத்தம் காரணமாக உங்கள் கற்றல் திறனும் புதிய சூழ்நிலைகளுக்கு உங்களைத் தயார் செய்து கொள்ளும் திறனும் பாதிக்கப்படுகின்றன. வேறு வகையில் சொன்னால், நீங்கள் உங்கள் மூளைக்கு செய்யும் பெரிய சேவை அதற்கு ஓய்வையும் தூக்கத்தையும் கொடுப்பதே.

உங்கள் உடலுக்கும் மூளைக்கும் ஆக க்குறைந்தது, 7 மணித்தியால ‘இரவுத் தூக்கம்’ கொடுத்தால் மட்டுமே இயல்பான ஆரோக்கியமான உடல் செயல்பாட்டையும் மூளையின் செயல்பாட்டையும் பெற முடியும்.

இரவு உணவுக்கும், நித்திரைக்குச் செல்வதற்குமிடையே 3 மணித்தியால இடைவெளி கொடுங்கள்.

பி.ப. 2 மணிக்குப்பின்னர் caffeine உள்ள பானங்களைத் தவிர்த்து விடுங்கள்.

ஒரு குறிப்பிட்ட நேரத்தில் வழமையாக நித்திரைக்குச்செல்வதையும் கண்விழிப்பதையும் வழமையாக்கிக் கொள்ளுங்கள்.

உங்கள் படுக்கையறையில் எவ்வித electronic பொருட்களையும் மொபைல் போன், தொலைக்காட்சி, வானொலி என்பவற்றை வைத்துக்கொள்ளாதீர்கள்; பயன்படுத்தாதீர்கள். படுக்கையறையில் நிசப்தமும் இருளும் இருப்பதை உறுதி செய்து கொள்ளுங்கள்.

Nourish - ஊட்டமளி

Diabetes monitor
Source: Getty Images

குறிப்பிட்ட உணவுகளைத்தவிர்ப்பதன் மூலமாகவும் குறிப்பிட்ட உணவுகளைச் சேர்த்துக்கொள்வதன் மூலமாகவும் மூளையின் ஆற்றலையும் ஞாபக சக்தியையும் அதிகரிக்கமுடியும்.

SHARP என்ற 5 அம்சத்தைப் பின்பற்றுங்கள்.

S : Slash sugar- இனிப்பை நீக்குங்கள்

H: Hydratre - போதுமான நீரை அருந்துங்கள்

A: Add: omega 3 என்ற fatty acids உள்ள மீன், கடலுணவு, விதைகள், முட்டை,அவகாடோ போன்ற பழங்கள், virgin olive oil என்பவற்றை உணவில் சேர்த்துக்கொள்ளுங்கள்.

R: Reduce portions- உண்ணும் உணவின் அளவைக்குறையுங்கள்.

P: plan meals ahead- உணவைத் திட்டமிட்டு உண்ணுங்கள்.

Connect- தொடர்பிலிரு

Image

நல்ல உறவுகள் அல்லது நட்புகள் வாழ்க்கையில் நலத்தையும் மகிழ்ச்சியையும் தருவதாக ஆராய்ச்சிகள் நீண்டகாலமாக சொல்கின்றன. Plasticity என்ற, மூளை தன்னை மாற்றிக்கொள்ளும் ஆற்றலையும் புதிய சூழலுக்கு பரிச்சயப்படுத்திக்கொள்ளும் ஆற்றலையும் இந்த உறவுகள், நட்புகள் அதிகரிக்கச்செய்வதாக புதிய ஆய்வுகள் சொல்கின்றன. நீண்ட காலமாக தொடர்பிலில்லாத ஒருவருடன் மீண்டும் தொடர்பு கொள்ளுங்கள். நண்பர்களை தேநீர் அருந்தவோ உணவருந்தவோ அழையுங்கள்.

உங்களைவிட அதிக வயதினருடனும் உங்களை விட வயது குறைவான வருடனும் பழகுங்கள்.

ஒரு volunteer - தன்னார்வ பணியில் ஈடுபடுங்கள்.

உங்கள் வாழ்க்கை அனுபவத்தில் கற்றுக்கொண்ட ஒரு விடயம் பற்றி உங்கள் குடும்பத்தில் உள்ள இளம் வயது சிறுவனுக்கோ சிறுமிக்கோ கடிதம் எழுதுங்கள்.

செல்லப்பிராணி ஒன்றை வளர்க்கத்தொடங்குங்கள்.

மறந்துவிடாதீர்கள். மூளையில் எல்லாவற்றிற்கும் இடமுண்டு. நீங்கள் உங்கள் செயல்களை மாற்றிக்கொள்ளும் போது மூளையும் தன்னை புதிது படுத்திக்கொள்கிறது; புது வடிவம் பெறுகிறது”.


Follow SBS Tamil

Download our apps

Watch on SBS

Tamil News

Stream now