கடந்த வார இறுதியில் சிட்னி நகரில், கீழடி தொல்பொருளியல் தளத்தில் இருந்து பெறப்பட்ட பொருட்கள், இடங்கள், கிராம அமைப்பு என்பவற்றை சித்தரிக்கும் ஒரு நிழற்படக் கண்காட்சி நடத்தப்பட்டது. தமிழ் எழுத்தாளர், சமூக ஆர்வலர் மற்றும் பசுமை நடை என்ற (புறக்கணிக்கப்பட்ட நினைவுச்சின்னங்களைப் பற்றித் தொடர்ந்து கற்றுக் கொள்ளும் ஒரு முறைசாரா குழு) அமைப்பின் நிறுவனர் அ.முத்துக்கிருஷ்ணன், இந்த அகழ்வாய்வுக் கண்டுபிடிப்பின் முக்கியத்துவத்தை விளக்கியது மட்டுமன்றி, ஒவ்வொரு நிழற்படத்தில் என்ன காண்பிக்கப்பட்டது என்பதையும் தெளிவாக விளக்கினார்.
இந்நிகழ்வை SBS தமிழ் ஒலிபரப்பு ஆவணப்படுத்தியுள்ளது.