- பதட்டப்படக் கூடாது.
- உங்கள் வாகன வேகத்தைக் குறைக்க வேண்டும் ஆனால் நிறுத்தக்கூடாது.
- உங்கள் வாகன சைகை விளக்கைப் (indicators) போடவேண்டும்.
- மற்றைய வாகனங்கள் பற்றி எச்சரிக்கையாக இருக்கவேண்டும்.
- சடுதியாக மற்றைய பாதைக்குள் அல்லது அவசர சேவை வண்டியின் வழிக்குள் திருப்பக்கூடாது.
- உங்களுக்கு இயலுமானவரை, தெருவின் இடது பக்கம் சென்று, தேவைப்பட்டால் உங்கள் வாகனத்தை நிறுத்தவும்.
- அவசர சேவைகள் வண்டி வரும் பாதையிலிருந்து பாதுகாப்பாக உங்கள் வண்டியை நகர்த்த முடியாவிட்டால், சந்தர்ப்பம் வரும்வரை தொடர்ந்து முன்னோக்கி நகர்ந்தவண்ணமிருங்கள்.
- நீங்கள் எல்லா நேரங்களிலும் சாலை விதிகளை மீறாமல் அவற்றைப் பின்பற்ற வேண்டும்.
உயிர் காக்க விரையும் ஒவ்வொரு வினாடியும் மிக முக்கியமானது.
மின்விளக்குகள் அல்லது Siren ஒலி எழுப்பிய அவசர சேவைகள் வண்டிகளுக்கு நீங்கள் வழி விட வேண்டும். உங்கள் பாதையிலிருந்து பாதுகாப்பாக, இயலுமானவரை உடனடியாக இடது புறமாக உங்கள் வாகனத்தை நகர்த்த வேண்டும்.
Know what to do if an emergency vehicle is coming through under lights and sirens?
1. Do not panic;
2. Slow down (but do not brake rapidly);
3. Use your indicators;
4. Be aware of other motorists;
5. Do not move suddenly or move into the path of the emergency
vehicle;
6. Move as far to the left of the road as you can and come to a stop;
7. If you cannot move out of the path safely, keep moving forward
until it’s safe to move over;
8. You are required to abide by road rules at all times.
Remember - seconds count in an emergency
If an emergency vehicle is approaching and is sounding an alarm or showing flashing lights, you must move to the left and out of the path of the vehicle as soon as you can do so safely.