SKIP TO MAIN CONTENT

லேபர் கட்சியின் புதிய தலைவராகிறார் Anthony Albanese!

Image of Mr Anthony Albanese
New Labor leader Anthony Albanese Source: AAP

1 min read

Published

Updated

Presented by Renuka


Skip to article content

லேபர் கட்சியின் புதிய தலைவராக Anthony Albanese போட்டியின்றி தேர்ந்தெடுக்கப்படுகிறார்.

தலைவர் பதவிக்கு போட்டியிடுவதற்கான பரிந்துரைகளைத் தாக்கல் செய்வதற்குரிய காலப்பகுதி நிறைவடைந்துள்ள நிலையில், Anthony Albanese மட்டுமே இதற்கு விண்ணப்பித்துள்ளார்.

தேர்தல் தோல்வியைத் தொடர்ந்து லேபர் தலைமைத்துவ பதவியிலிருந்து விலகுவதாக Bill Shorten அறிவித்ததையடுத்து கட்சியின் புதிய தலைவர் யார் என்ற கேள்வி எழுந்தது.

தற்போது துணைத்தலைவராக இருக்கும் Tanya Plibersek மற்றும் லேபர் முக்கியஸ்தர் Chris Bowen ஆகியோர் தலைமைத்துவத்திற்கான போட்டியில் குதிப்பார்கள் என்று எதிர்பார்க்கப்பட்டபோதும் அவர்கள் இருவரும் இதிலிருந்து ஒதுங்கிக்கொண்டனர்.

இதையடுத்து லேபர்கட்சியின் 21வது தலைவராக Anthony Albanese தெரிவாகியுள்ளார். துணைத் தலைவராக Richard Marles அவர்கள் தேர்ந்தெடுக்கப்படுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.

இதேவேளை தலைமைத்துவத்திலிருந்து விடைபெறும் Bill Shorten அவர்கள், முன்னாள் பிரதமர்களான Kevin Rudd மற்றும் Julia Gillard ஆகியோருக்கிடையிலான தலைமைத்துவ சவால்களையடுத்து எழுந்த குழப்பங்களின் மத்தியிலும் கடந்த 2013-ம் ஆண்டு முதல்  மிகவும் கடினமான எதிர்கட்சித்தலைவர் பதவியை திறம்பட வகித்ததாக லேபர்கட்சி அங்கத்தவர்கள் புகழாரம் சூட்டியுள்ளனர்.


Follow SBS Tamil

Download our apps

Watch on SBS

Tamil News

Stream now