Labor கட்சித் தலைவர் தனது கட்சித் தொண்டர்களுடன் சில நிமிடங்களுக்கு முன் பேசிய போது கூறியதன் சுருக்கம்:
நண்பர்களே,
இந்தத் தேர்தலின் முடிவுகளை இன்றிரவு நாம் அறிய மாட்டோம். முடிவுகள் பலநாட்களுக்குத் தெளிவாகத் தெரியாமல் இருக்கலாம். ஆனால் ஒன்று மட்டும் நிச்சயம் Labor கட்சி மீண்டும் உயிர்த்தெழுந்துள்ளது.
நாங்கள் நல்ல திட்டங்களை முன்வைத்து இந்த தேர்தலில் போட்டியிட்டோம். அதற்காக நீங்களும் கடுமையாக உழைத்திருக்கிறீர்கள். உங்கள் கடின உழைப்பு வீண் போகவில்லை.
Liberal கட்சித் தலைவர் Malcolm Turnbull பொருளாதாரத்தை முன்னேற்றப்போகிறேன் என்று கூறிக்கொண்டு பிரச்சாரம் செய்தார். ஆனால் அவருடைய உண்மை உருவத்தை மக்கள் உணர்ந்திருக்கிறார்கள் என்பதை இன்று காட்டியுள்ளார்கள்.
அடுத்த வாரம் எதுவும் நடக்கலாம். நாம் ஆட்சியமைக்கலாம்.... நாம் எதிர்க்கட்சியிலேயே தொடர்ந்தும் இருக்க வேண்டி வரலாம். ஆனால், Labor கட்சி மீண்டும் உயிர்த்தெழுந்துள்ளது, புத்துயிர் பெற்றுள்ளது.
நாங்கள் Medicare ஐக் காப்பாற்றி விட்டோம். அதற்காக நாம் தொடர்ந்தும் உழைப்போம்.
நான் எனது கட்சியின் மூத்த உறுப்பினர்களுக்கு மட்டுமல்ல, தொழிற்சங்கத் தலைவர்களுக்கும் இந்த வேளையில் நன்றி கூறவிரும்புகிறேன். எனக்கு அறிவுரை வழிங்கியவர்கள் அனைவருக்கும் எனது மனமார்ந்த நன்றி. அரசியலில் குடும்பத்தின் ஆதரவு இல்லாமல் ஒருவர் எதுவுமே செய்ய முடியாது. அந்த வகையில் என் குடும்பத்தினருக்கு நன்றி.
நாங்கள் இன்று மகிழ்ச்சியாக இருப்பதற்குக் காரணம் இருக்கிறது. ஆனால் இந்தத் >துர்தல் எம்மைப் பற்றியது அல்ல. ஆஸ்திரேலிய மக்கள் குறித்தது. Labor கட்சி பல்வேறு திட்டங்களை முன்வைத்து இந்தத் தேர்தலில் போட்டியிட்டது. அதை செயற்படுத்துவது தான் எமது நோக்கம்.
தேர்தலி1ல் தெரிவு செய்யப்பட்டவர்கள் அனைவருக்கும் கட்சி பேரமின்றி வாழ்த்துகளைத் தெரிவிக்கிறேன். புதிதாகத் தெரிவு செய்யப்பட்டவர்களுக்கு வாழ்த்துக் கூறி வரவேற்கிறேன்.
நாங்கள் ஒரு சிறந்த நாட்டில் வாழ்கிறோம். இந்த நாட்டில் சமத்துவத்துடன் அனைவரும் பெருமையுடன் வாழ Labor கட்சி தொடர்ந்தும் உழைக்கும். Labor கட்சி யாரையும் பின்தங்கி விடச் செய்யாது. எல்லோரது வளர்ச்சிக்கும் முன்னேற்றத்திற்குமாக நாங்கள் ஆஸ்திரேலியாவை முன்னெடுத்துச் செல்வோம்.
