தற்காலிக பாதுகாப்பு விசாவிலுள்ளவர்களுக்கு நிரந்தர விசா: அடுத்த ஆண்டு அறிவிப்பு!

ஆஸ்திரேலியாவில் தற்காலிக பாதுகாப்பு விசாவுடன் வாழ்ந்துவரும் சுமார் 19 ஆயிரம் அகதிகளுக்கான நிரந்தர விசா வழங்கும் நடவடிக்கை அடுத்த ஆண்டு முதல் ஆரம்பிக்கப்படுமென செய்திகள் தெரிவிக்கின்றன.

Asylum seeker boat

File: Asylum seeker boat. Inset: The minister for immigration Andrew Giles

அகதிகளுக்கான நிரந்தர விசா குறித்த அறிவிப்பை அடுத்த ஆண்டு தொடக்கத்தில் வெளியிடுவதற்கு லேபர் அரசு திட்டமிட்டுள்ளதாக The Guardian, Sydney Morning Herald உள்ளிட்ட ஊடகச்செய்திகளில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இதன்கீழ் ஆஸ்திரேலியாவில் தற்காலிக பாதுகாப்பு விசாவுடன் கடந்த 10 ஆண்டுகளுக்கு மேல் வாழ்ந்துவரும் சுமார் 19 ஆயிரம் அகதிகள், நிரந்தர வதிவிட விசாவிற்கு விண்ணப்பிப்பதற்கு தகுதிபெறவுள்ளதுடன் social security benefits போன்ற அரச மானியங்களைப் பெறுவதற்கும் தகுதிபெறவுள்ளனர்.

அதுமட்டுமல்லாமல் வெளிநாடுகளுக்கு சுதந்திரமாக சென்றுவருவதற்கும், தமது குடும்பத்தினரை ஆஸ்திரேலியா வரவழைப்பதற்கு விண்ணப்பிக்கவும் முடியும்.

இவ்வாறு நிரந்தர விசா பெறுவதற்குத் தகுதியுள்ளவர்களில் ஈராக், ஆப்கானிஸ்தான், ஈரான், மியன்மார் மற்றும் இலங்கை நாடுகளைச் சேர்ந்த அகதிகள் அடங்குகின்றனர்.

இவர்கள் அனைவரும் TPV எனப்படும் 3 வருட விசா அல்லது SHEV எனப்படும் 5 வருட விசாவில் இருக்க வேண்டும். அதுமட்டுமல்லாமல் இந்த விசாவை கடந்த 10 ஆண்டுகளில் அவர்கள் ஒரு தடவையாவது புதுப்பித்திருக்க வேண்டும்.

2023ம் ஆண்டில் அரசு அறிவிக்கவுள்ள மாற்றத்தின்கீழ் குறித்த 19 ஆயிரம் பேரும், அவர்களது TPV அல்லது SHEVஇலிருந்து Resolution of Status Visa என்பதற்கு மாற்றப்படுவர். அதன் பின்னர் அவர்கள் ஆஸ்திரேலிய நிரந்தர வதிவிடம்பெறுவதற்கு விண்ணப்பிக்கலாம் என குறிப்பிடப்படுகிறது.

லேபர் கட்சி ஆட்சிக்கு வந்தால், ஆஸ்திரேலியாவில் தற்காலிக பாதுகாப்பு விசாவுடன் உள்ளவர்களுக்கு நிரந்தர பாதுகாப்பு விசா வழங்கப்படும் என்பதாக தேர்தல் வாக்குறுதியை வழங்கியிருந்தபோதிலும், இந்த வாக்குறுதியை அரசு இன்னமும் நிறைவேற்றவில்லை என்ற விமர்சனங்கள் தொடர்கின்றன.

TPVகள் மற்றும் SHEVகளை ஒழிப்பதற்கான அதன் வாக்குறுதியை லேபர்கட்சி எப்போது நிறைவேற்றும் என, கடந்த மாதம் நாடாளுமன்றத்தில்வைத்து குடிவரவு அமைச்சர் Andrew Gilesஇடம் சுயேச்சை எம்.பி.க்கள் Andrew Wilkie மற்றும் Monique Ryan இருவரும் கேள்வி எழுப்பியிருந்தனர்.
இதற்குப் பதிலளித்த அமைச்சர் Giles, இவ்விடயத்தில் உள்துறை அமைச்சர் Clare O’Neil உடன் இணைந்து நடவடிக்கைகளை மேற்கொண்டுவருவதாக தெரிவித்திருந்தார்.
அதேநேரம் புதிய ஆண்டு ஆரம்பப்பகுதியில் TPV மற்றும் SHEV குறித்த தமது கொள்கை அறிவிப்பை அரசு வெளியிடும் என சுட்டிக்காட்டப்படுகிறது.

ஆனால் தமது அகதி விண்ணப்பக் கோரிக்கைகள் நிராகரிக்கப்பட்ட நிலையில் மேன்முறையீடுசெய்துவிட்டு Bridging விசாவுடன் காத்திருக்கும் சுமார் 12 ஆயிரம் புகலிடக்கோரிக்கையாளர்களின் எதிர்காலம் தொடர்ந்தும் கேள்விக்குறியாகவே உள்ளது.

இவர்களது விண்ணப்பங்கள் தொடர்பில் குடிவரவு அமைச்சர் இறுதிமுடிவினை இன்னமும் எடுக்கவில்லை என குறிப்பிடப்படுகிறது.
SBS தமிழ் ஒலிபரப்பை திங்கள், புதன், வெள்ளி மற்றும் ஞாயிறு ஆகிய நாட்களில் இரவு 8 மணிக்கு SBS Radio 2 வழியாக கேட்கலாம்.உங்களது பிரதேசத்துக்குரிய அலைவரிசை என்னவென்று தெரிந்துகொள்ள எமது tune in  
பக்கத்திற்குச் செல்லுங்கள். டிஜிட்டல் வானொலியில் 
செவிமடுக்க ‘SBS Radio’ எனத் தேடுங்கள்

Share

Published

Updated

Source: SBS

Share this with family and friends


Follow SBS Tamil

Download our apps
SBS Audio
SBS On Demand

Listen to our podcasts
Independent news and stories connecting you to life in Australia and Tamil-speaking Australians.
Ease into the English language and Australian culture. We make learning English convenient, fun and practical.
Get the latest with our exclusive in-language podcasts on your favourite podcast apps.

Watch on SBS
Tamil News

Tamil News

Watch in onDemand