தடுப்பூசி போட்டதான சான்றிதழ் இது என்று SMS வந்தால் எச்சரிக்கை!

தனிப்பட்ட தடுப்பூசி சான்றிதழ் வழங்குவதற்கான சமீபத்திய SMS மோசடி குறித்து எச்சரிக்கையாக இருக்குமாறு அரசு அறிவுறுத்துகிறது

Latest SMS scam purporting to issue a personal vaccination certificate

Latest SMS scam purporting to issue a personal vaccination certificate Source: SBS Tamil

‘COVIDsafe’ அல்லது ‘BeCOVIDsafe’ இலிருந்து அனுப்பப்பட்டதைப் போல தோன்றும் SMS குறுஞ்செய்திகள் தற்போது உலா வருகின்றன.

நீங்கள் தடுப்பூசி போட்டதற்கான சான்றாக, உங்கள் தடுப்பூசி கடவுச்சீட்டு ஏதோ ஒரு எண்ணில் கிடைக்கிறது என்று ஒரு குறுஞ்செய்தி உங்களுக்கு வரலாம்.

ஆனால், அந்த குறுஞ்செய்தியிலுள்ள இணைப்பை நீங்கள் சொடுக்கினால், தீங்கிழைக்கும் இணையதளம் ஒன்றிற்கு நீங்கள் செல்லக் கூடும்  அல்லது Malware எனப்படும் தீங்கிழைக்கும் செயலி ஒன்று உங்கள் மொபைல் தொலைபேசியில் தரவிறங்கக் கூடும்.
மோசடி செய்பவர்கள் திருடக்கூடும்
அதைத் தொடர்ந்து உங்கள் தனிப்பட்ட தரவுகள், மற்றும் வங்கி மற்றும் நிதி நிறுவனங்களின் தகவல்களை, மோசடி செய்பவர்கள் திருடக்கூடும்.

உங்களுக்கோ அல்லது உங்களுக்குத் தெரிந்தவர் யாருக்கோ இப்படி ஒரு SMS / குறுஞ்செய்தி கிடைத்திருந்தால், உடனடியாக அதை உங்கள் தொலைபேசியிலிருந்து நீக்கவும். அந்த இணைப்பை கிளிக் செய்ய வேண்டாம் என்று அரசு எச்சரிக்கிறது.
In this photo illustration the malware logo seen in the background of a silhouette hand holding a mobile phone. (Photo by Rafael Henrique / SOPA Images/Sipa USA)
In this photo illustration the malware logo seen in the background of a silhouette hand holding a mobile phone. (Photo by Rafael Henrique /SOPA Images/Sipa USA) Source: Sipa USA Rafael Henrique / SOPA Images/Si
இதில் நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டிய முக்கிய உண்மைகள்:

  • Covid-19 தடுப்பூசி பெற்ற சான்றிதழ்கள் மற்றும் MyGov வழங்கும் எந்த சேவையைப் பெறவும் நீங்கள் கட்டணம் செலுத்த வேண்டியதில்லை.
  • MyGov ஒரு போதும் ஒரு இணைப்பை உள்ளடக்கிய குறுஞ்செய்தியை உங்களுக்கு அனுப்பாது.
  • அனைவரும் Service Australiaவின் பாதுகாப்பான இணைய தளத்தினூடாக Covid-19 தடுப்பூசி போட்டுக் கொண்டதற்கான சான்றைப் பெறலாம்.
  • இணைய வழியாக இதனைப் பெற முடியாதவர்கள், Australian Immunisation register என்ற நோய்த் தடுப்பு பதிவை 1800 653 809 என்ற எண்ணில் காலை 8 மணி முதல் மாலை 5 மணி வரை வார நாட்களில் தொடர்பு கொள்ளலாம்.
  • இப்படியான மோசடியால் பாதிக்கப்பட்டவர்கள், மோசடிகள் மற்றும் அடையாள திருட்டு (Scams and Identity Theft) உதவி மையத்தை 1800 941 126 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம்.
  • பாதுகாப்பாக இருப்பது எப்படி என்பதற்கான தகவலுக்கு https://www.servicesaustralia.gov.au/individuals/information-in-your-language/products/top-tips-staying-safe-online என்ற இணைய தளத்திற்கு செல்லவும்.

 

SBS தமிழ் ஒலிபரப்பை திங்கள், புதன், வெள்ளி மற்றும் ஞாயிறு ஆகிய நாட்களில் இரவு 8 மணிக்கு SBS Radio 2 வழியாக கேட்கலாம்.
உங்களது பிரதேசத்துக்குரிய அலைவரிசை என்னவென்று தெரிந்துகொள்ள எமது tune in பக்கத்திற்குச் செல்லுங்கள்.
டிஜிட்டல் வானொலியில் செவிமடுக்க ‘SBS Radio’ எனத் தேடுங்கள்.


Share

Published

By Kulasegaram Sanchayan

Share this with family and friends


Follow SBS Tamil

Download our apps
SBS Audio
SBS On Demand

Listen to our podcasts
Independent news and stories connecting you to life in Australia and Tamil-speaking Australians.
Ease into the English language and Australian culture. We make learning English convenient, fun and practical.
Get the latest with our exclusive in-language podcasts on your favourite podcast apps.

Watch on SBS
Tamil News

Tamil News

Watch in onDemand