SKIP TO MAIN CONTENT

விக்டோரியாவில் Learner drivers பரீட்சையை இணையவழியாக மேற்கொள்ள நடவடிக்கை!

The Victorian government has launched the new online learner drivers test.
The Victorian government has launched the new online learner drivers test. Source: Getty

1 min read

Published

Updated


Skip to article content

விக்டோரியாவில் புதிதாக வாகனம் ஓட்டக் கற்றுக்கொள்பவர்கள் இதற்கான learner drivers test-ஐ இணையவழியாக மேற்கொள்ளவதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன.

கொரோனா பரவல் காரணமாக ஓட்டுநர் அனுமதிப் பத்திரம் மற்றும்  learner drivers பரீட்சை போன்றவற்றுக்கான விண்ணப்பங்கள் பெருமளவில் தேங்கியதையடுத்து விக்டோரிய அரசு இந்த இணையவழி பரீட்சையை அறிமுகம் செய்கிறது.

இதன்மூலம் ஓட்டுநர் அனுமதிப்பத்திரம் பெறுவதற்கான செயன்முறையை விரைவுபடுத்த அரசு திட்டமிட்டுள்ளது.

இதன்படி முதற்கட்டமாக பரீட்சார்த்த முயற்சியாக learner drivers பரீட்சைக்காக முன்பதிவு செய்த சுமார் 500 பேர் இந்த இணையவழி பரீட்சைக்குத் தோற்றவுள்ளதாக குறிப்பிடப்படுகிறது.

இந்த நடவடிக்கை வெற்றியளிக்கும்பட்சத்தில் பரந்தளவில் இந்த இணையவழி பரீட்சையை நடைமுறைப்படுத்துவதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுகின்றன.

இணையவழி பரீட்சைக்கு தோற்றுபவர்கள் இதற்கென myVicRoads account ஒன்றை உருவாக்குவதுடன் பரீட்சைக்கான கட்டணத்தையும் செலுத்த வேண்டும். அதுமட்டுமல்லாமல் இணையவழி பரீட்சையை மேற்கொள்வதற்கு ஏதுவான இலத்திரனியல் உபகரணமும் அவர்களிடம் இருக்க வேண்டும்.

இப்பரீட்சையில் வெற்றியடைபவர்கள் VicRoads அலுவலகத்திற்குச் சென்று அங்கு தமது அடையாளத்தை உறுதிப்படுத்துவதுடன் புகைப்படத்தையும் எடுத்து கண்பார்வைக்கான சோதனையையும் மேற்கொள்ள வேண்டும் என தெரிவிக்கப்படுகிறது.

SBS தமிழ் ஒலிபரப்பை திங்கள், புதன், வெள்ளி மற்றும் ஞாயிறு ஆகிய நாட்களில் இரவு 8 மணிக்கு SBS Radio 2 வழியாக கேட்கலாம்.

உங்களது பிரதேசத்துக்குரிய அலைவரிசை என்னவென்று தெரிந்துகொள்ள எமது tune in பக்கத்திற்குச் செல்லுங்கள்.

டிஜிட்டல் வானொலியில் செவிமடுக்க ‘SBS Radio’ எனத் தேடுங்கள்.


Follow SBS Tamil

Download our apps

Watch on SBS

Tamil News

Stream now