கொரோனா வைரஸ் பரவல் காரணமாக விக்டோரியாவில் நிறுத்திவைக்கப்பட்டிருந்த drive tests- ஓட்டுனர் உரிமம் பெறுவதற்கான பரீட்சைகள் மீளவும் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக VicRoads அறிவித்துள்ளது.
இதன்படி light vehicle drive tests (car, ute, van), hazard perception tests மற்றும் learners’ tests ஆகியன ஜுன் 15 திங்கட்கிழமை முதல் மீள ஆரம்பிக்கப்பட்டுள்ளன.
ஓட்டுனர் உரிமம் பெறுவதற்கான பரீட்சைகளுக்கென மேற்கொள்ளப்பட்டிருந்த முன்பதிவுகள், கொரோனா பரவலையடுத்து கடந்த மார்ச் 25 முதல் ரத்துச்செய்யப்பட்டிருந்தன.
இதன்காரணமாக 55 ஆயிரம் drive tests உட்பட சுமார் 1 லட்சம் licensing appointments பிற்போடப்பட்டிருந்தன.
தற்போது புதிதாக பதிவுகள் எவையும் ஏற்றுக்கொள்ளப்படவில்லை எனத் தெரிவித்துள்ள VicRoads, ஏற்கனவே பதிவுசெய்தவர்களுக்கு முன்னுரிமையளித்து அவர்களுக்கான பரீட்சைகளை-கொரோனா பாதுகாப்பு விதிகளுக்கு உட்பட்டு- ஆரம்பிப்பதாக கூறியுள்ளது.
இதற்கென புதிதாக 200 ஊழியர்கள் பணியில் அமர்த்தப்படுகின்றனர்.
VicRoads ஊழியர்கள் சம்பந்தப்பட்ட விண்ணப்பதாரர்களைத் தொடர்புகொண்டு ஓட்டுனர் பரீட்சைக்கான திகதி மற்றும் நேரங்களை தெரிவுசெய்யும்படி கோருவர் என குறிப்பிடப்பட்டுள்ளது.
பிற்போடப்பட்ட பரீட்சைகள் அனைத்தும் நடத்திமுடிக்கப்பட்ட பின்னரே புதிதாக விண்ணப்பங்களும் முன்பதிவுகளும் ஏற்றுக்கொள்ளப்படும் என தெரிவிக்கப்படுகிறது.
உங்களுக்கு கொரோனா தொற்று ஏற்பட்டிருக்கலாம் என்ற சந்தேகம் எழுந்தால் உங்களது மருத்துவரையோ அல்லது 1800 020 080 என்ற இலக்கத்தையோ அழையுங்கள்.
கொரோனா வைரஸ் தொற்று ஏற்பட்டால் மிகவும் இலேசான அறிகுறிகள் முதல் நிமோனியா வரை செல்லக்கூடும் என அரச இணையத்தளம் கூறுகின்றது. காய்ச்சல், தொண்டை நோவு, இருமல், உடற்சோர்வு, சுவாசிப்பதில் சிரமம் போன்ற அறிகுறிகள் முக்கியமானவை.
உங்களுக்கு கடுமையான உடல்நலக்குறைவு ஏற்பட்டால் அல்லது சுவாசிப்பதற்கு சிரமம் ஏற்பட்டால் 000 என்ற இலக்கத்தை அழையுங்கள்.
ஒவ்வொருவருக்கிடையிலும் 1.5 மீட்டர் சமூக இடைவெளியைப் பேணுங்கள்.
அரசால் அறிமுகப்படுத்தப்பட்டுள்ள COVIDSafe செயலியை உங்கள் கைபேசியில் தரவிறக்கிக்கொள்ளுங்கள்.
கொரோனா வைரஸ் (COVID-19) குறித்த முக்கிய தகவல்கள் sbs.com.au/coronavirus என்ற எமது இணையத்தில் 63 மொழிகளில் கிடைக்கின்றன.
Share
