SKIP TO MAIN CONTENT

கிரிக்கெட் சாதனை மன்னன் ஷேன் வோர்ன் தாய்லாந்தில் மரணம்!

கிரிக்கெட் உலகின் முடிசூடா மன்னனாக வலம் வந்த ஆஸ்திரேலியாவின் முன்னாள் சுழற்பந்து வீச்சாளர் ஷேன் வோர்ன், தாய்லாந்தில் வெள்ளிக்கிழமை இரவு மாரடைப்பினால் மரணமானார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. அவருக்கு வயது 52.

Warne
Former Australian Test bowler Shane Warne Source: Getty Images

1 min read

Published

Updated


Skip to article content

தாய்லாந்தின் இரண்டாவது பெரிய தீவான Koh Samui பகுதியிலுள்ள villa ஒன்றில் தங்கியிருந்தபோது ஷேர்ன் வோர்னுக்கு திடீரென்று மாரடைப்பு ஏற்பட்டதாகவும், மருத்துவர்கள் உடனடியாக விரைந்து சென்று சிகிச்சையளித்தபோதும் அது பலனளிக்கவில்லை என்றும் தெரிவிக்கப்படுகிறது.

ஆஸ்திரேலியாவின் முன்னாள் கிரிக்கெட் சாதனையாளர் ரொட்னி மாஷின் இறப்புக்கு ஷேன் வோர்ன் தனது Twitter-இல் இரங்கல் தெரிவித்து 12 மணிநேரத்தில், ஷேன் வோர்னின் மரணச்செய்தி கிரிக்கெட் ரசிகர்களை அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது.

ஷேன் வோர்னின் நெருங்கிய நண்பரும் இங்கிலாந்து கிரிக்கெட் அணி நட்சத்திரமுமான கெவின் பீட்டர்ஸன் உட்பட கிரிக்கெட் நட்சத்திரங்கள் வோர்னின் மரணம் தொடர்பாக தங்களது அதிர்ச்சியையும் பெரும் துயரையும் வெளியிட்டுள்ளனர்.

1992 ஆம் ஆண்டு கிரிக்கெட் வாழ்வினை ஆரம்பித்து சகல எதிரணிகளுக்கும் தனது சுழற் பந்து வீச்சினால் சிம்ம சொப்பனமாகத் திகழ்ந்த ஷேன் வோர்ன், 15 வருட கிரிக்கெட் வாழ்வில் ஆயிரம் விக்கெட்டுக்களுக்கு மேல் வீழ்த்தி சாதனை படைத்தார். பல்வேறு சர்ச்சைகளிலும் சிக்கினார்.

ஷேன் வோர்னின் இறுதி நிகழ்வுகள் தொடர்பான விவரங்கள் விரைவில் அறியத்தரப்படும் என்று அவரது குடும்பத்தினர் தெரிவித்துள்ளனர்.

2003 ஆம் ஆண்டு விளையாட்டின்போது சந்தேகத்துக்கிடமான பவுடரை உட்கொண்டார் என்ற குற்றச்சாட்டில் ஷேன் வோர்னுக்கு கிரிக்கெட் விளையாடுவதற்குத் தடை விதிக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது. 


SBS தமிழ் ஒலிபரப்பை திங்கள், புதன், வெள்ளி மற்றும் ஞாயிறு ஆகிய நாட்களில் இரவு 8 மணிக்கு SBS Radio 2 வழியாக கேட்கலாம்.

உங்களது பிரதேசத்துக்குரிய அலைவரிசை என்னவென்று தெரிந்துகொள்ள எமது tune in பக்கத்திற்குச் செல்லுங்கள்.

டிஜிட்டல் வானொலியில் செவிமடுக்க ‘SBS Radio’ எனத் தேடுங்கள்.


Follow SBS Tamil

Download our apps

Watch on SBS

Tamil News

Stream now