நியூ சவுத் வேல்ஸ் மாநிலத்தில் காட்டுத்தீயில் சிக்கிய koala-வை பெண் ஒருவர் தனது உயிரைப் பயணம் வைத்து மீட்டிருந்தநிலையில் அது கருணைக்கொலை செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
Toni Doherty என்ற நியூ சவுத் வேல்ஸ் பெண், காட்டுத்தீ காரணமாக உடலெங்கும் காயங்களுக்குள்ளான Lewis எனப் பெயரிட்டப்பட்ட koala-வை தனது மேலாடையைக் கழற்றிப் போர்த்தியதுடன் குடிநீரும் கொடுத்து காப்பாற்றியிருந்தார்.
இதையடுத்து Port Macquarie Koala மருத்துவமனையில் Lewis சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டது.
எனினும் Lewis-க்கு ஏற்பட்ட தீக்காயங்கள் பாரதூரமானவை என்பதால் அதிலிருந்து மீள்வது இயலாமல் போனதையடுத்து அது கருணைக்கொலை செய்யப்படுவதாக Port Macquarie Koala மருத்துவமனை தனது முகநூலில் அறிவித்துள்ளது.
