ஆஸ்திரேலியாவின் ஆளும் லிபரல் கூட்டணி அரசு மக்கள் ஆதரவைப் பெற்றுக்கொள்வதற்கு, மானியங்களை அரசியல் ஆயுதமாகப் பயன்படுத்தியிருக்கிறது என The Age மற்றும் SMH ஆகிய ஊடகங்கள் இணைந்து மேற்கொண்ட புலனாய்வுச் செய்தி ஆய்வில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த மூன்று வருடங்களில், ஆளும் லிபரல் கூட்டணி அமைச்சர்களும், நாடாளுமன்ற உறுப்பினர்களும் தமது தேர்தல் தொகுதிகளின் ஊடாக 190 பில்லியன் டொலர்களை மானியங்களாக வழங்குவதற்குப் பெற்றுக்கொண்டுள்ள அதேவேளை, எதிர்க்கட்சியான லேபர் 530 மில்லியன் டொலர்களை மாத்திரமே தனது தேர்தல் தொகுதி மக்களுக்கு மானியங்களாகப் பெற்றிருக்கிறது.
குறிப்பாக லேபர் கட்சியைவிடவும் 3 மடங்கு அதிகமாக லிபரல் தொகுதிக்கு மானியத் தொகை வழங்கப்பட்டுள்ளதாக இச்செய்தி சுட்டிக்காட்டியுள்ளது.
மக்களின் வரிப்பணத்தை மானியங்களாக வழங்குவதில் ஆளும் லிபரல் கூட்டணி அரசு பாரபட்சம் காண்பித்திருப்பதாகவும், அதனைத் தனது அரசியல் ஆதாயத்துக்கான ஆயுதமாகப் பயன்படுத்தியிருப்பதாகவும் இச்செய்தி ஆய்வு கடுமையாக விமர்சித்துள்ளது.
சுமார் 151 தேர்தல் தொகுதிகளுக்கு வழங்கப்பட்டுள்ள சுமார் 19 ஆயிரம் தனிநபர் மற்றும் அமைப்பு சார் மானிய விவரங்களைத் தரவுகளுடன் ஆய்வு செய்து முன்வைத்துள்ள இந்த ஊடகங்கள், அவற்றில் லிபரலின் ஏகபோக செல்வாக்கு காணப்படுவதாக தெரிவித்துள்ளது.
உதாரணத்துக்கு, எதிர்க்கட்சித்தலைவர் Anthony Albanese-யின் சிட்னி Grayndler தேர்தல் தொகுதிக்கு 718 ஆயிரம் டொலர்கள் கிடைக்கப்பெற்றுள்ள அதேவேளை, அவரது தொகுதிக்கு அருகிலுள்ள லிபரல் ஆட்சியிலுள்ள Reid தொகுதிக்கு 14.8 மில்லியன் டொலர்கள் மானியமாக வழங்கப்பட்டுள்ளது.
இப்படியாக மானியம் பெற்றுள்ள பல அமைப்புகளில் ஆஸ்திரேலியாவில் இயங்கும் பல தமிழ் அமைப்புகளும் அடங்குகின்ற பின்னணியில், ஒப்பீட்டளவில் ஆளும் லிபரல் கூட்டணியின் தொகுதிகளிலுள்ளவற்றுக்கே அதிகளவு நிதி வழங்கப்பட்டுள்ளதாக புள்ளிவிபரங்கள் தெரிவிக்கின்றன.
சமூக அமைப்புகளுக்கு மானியம் வழங்குவது நல்ல விடயம் என்றபோதிலும் ஆஸ்திரேலிய அரசு அதனை அரசியல் லாபத்திற்காகப் பயன்படுத்தாமல் பாரபட்சமின்றி அனைத்து தொகுதிகளுக்கும் பகிர்ந்தளிக்க வேண்டுமென வலியுறுத்தப்பட்டுள்ளது.
இதேவேளை கடந்த மூன்று வருடங்களில் மானியம் பெற்ற அமைப்புகளின் பட்டியல் வெளியிடப்பட்டுள்ள பின்னணியில், இதில் இடமபெற்றுள்ள இலங்கை, இந்திய அமைப்புகள் சார்ந்த சில மானிய விவரங்கள் வருமாறு -





எந்தெந்த அமைப்புகள் எவ்வளவு தொகையை மானியமாகப் பெற்றிருக்கின்றன என்ற விவரங்களை www.grants.gov.au என்ற இணையத்தளத்தில் பெற்றுக்கொள்ளலாம்

Source: GrantsConnect

Source: GrantsConnect

Source: GrantsConnect

Source: GrantsConnect

Source: GrantsConnect

Source: GrantsConnect

Source: GrantsConnect
கொரோனா குறித்த தகவல்கள்
உங்களுக்கு சளி அல்லது flu அறிகுறிகள் ஏற்பட்டால் வீட்டிலேயே இருங்கள். மற்றும் உங்கள் மருத்துவரை அழைத்து சோதனைக்கு ஏற்பாடு செய்யுங்கள். அல்லது கொரோனா வைரஸ் உதவி மையத்தை 1800 020 080 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளவும்.
கொரோனா வைரஸ் தொற்று ஏற்பட்டால் மிகவும் இலேசான அறிகுறிகள் முதல் நிமோனியா வரை செல்லக் கூடும் என அரச இணையத்தளம் கூறுகின்றது. காய்ச்சல், தொண்டை நோவு, இருமல், உடற் சோர்வு, சுவாசிப்பதில் சிரமம் போன்ற அறிகுறிகள் முக்கியமானவை.
உங்களுக்கு கடுமையான உடல் நலக்குறைவு ஏற்பட்டால் அல்லது சுவாசிப்பதற்கு சிரமம் ஏற்பட்டால் 000 என்ற இலக்கத்தை அழையுங்கள்.
ஒவ்வொருவருக்கிடையிலும் 1.5 மீட்டர் சமூக இடைவெளியைப் பேணுங்கள்.
கொரோனா வைரஸ் (COVID-19) குறித்த முக்கிய தகவல்கள் sbs.com.au/coronavirus என்ற எமது இணையத்தில் 63 மொழிகளில் கிடைக்கின்றன.
SBS தமிழ் ஒலிபரப்பை திங்கள், புதன், வெள்ளி மற்றும் ஞாயிறு ஆகிய நாட்களில் இரவு 8 மணிக்கு SBS Radio 2 வழியாக கேட்கலாம்.
உங்களது பிரதேசத்துக்குரிய அலைவரிசை என்னவென்று தெரிந்துகொள்ள எமது tune in பக்கத்திற்குச் செல்லுங்கள்.