SKIP TO MAIN CONTENT

Liberal கட்சித் தலைவர் தனது கட்சித் தொண்டர்களுடன் சில நிமிடங்களுக்கு முன்

Malcolm Turnbull

2 min read

Published

Updated

By Kulasegaram Sanchayan


Skip to article content

Liaberal கட்சித் தலைவர் தனது கட்சித் தொண்டர்களுடன் சில நிமிடங்களுக்கு முன் பேசிய போது கூறியதன் சுருக்கம்:

 

நண்பர்களே, 

மிகவும் மிகவும் கடினமான போட்டியை நாம் சந்தித்துள்ளோம்,  ஆனால் கட்சி அதிகாரிகள் அறிவுறுத்தலின்படி, நான் உங்களுக்கு இதனைச் சொல்லலாம்.  நிச்சயம் நாங்கள் வெற்றி பெறப்போகிறோம்.

தேர்தலுக்கு முன் வாக்களித்தவர்களின் வாக்குகள் இன்றிரவு இரண்டு மணிக்குப்பின்னர் தான் எமக்குத் தெரியவரும் அதில் எமது கட்சிக்கு ஆதரவாக வாக்களித்தவர்கள் தான் அதிகமாக இருப்பார்கள்.

நாங்கள் ஒரு நேஎர்மையான பிரச்சாரத்தை மேற்கொண்டோம்.  ஆனால், Labor கட்சி ஒரு பொய்ப் பிரச்fசாரத்தை மேற்கொண்டது.  Medicare குறித்து அவர்கள் ஒரு பொய்யான, பிழையான பிரச்சாரத்தை நடத்தி, மக்களைப் பயமுறுத்தித் தான் வாக்குகளைப் பெற்றிருக்கிறார்கள்.

நாங்கள் பொருளாதார முன்னேற்றத்திற்காகவே தேர்fதலில் நின்றோம்.  அதை நாம் சாதித்துக் காட்டுவோம்.  இந்தக் காலத்திற்குத் தேவையான கொள்கைளுடன் தான் நாம் போட்டியிட்டோம்.  இன்னும் சில வாரங்களில் முடிவுகள் வெளியாகும்,  ஆட்சியை அமைக்கும் பொறுப்பு எமக்கு வரும்.  இந்த வேளையிலே ஒன்றை சொல்லி வைக்க விரும்புகிறேன்.  Labor கட்சிக்கு அந்தப் பலமோ யோக்கியமோ இல்லை என்பது என் கணிப்பு.

நான் எனது கட்சியின் மூத்த உறுப்பினர்களுக்கு இந்த வேளையில் நன்றி கூறவிரும்புகிறேன். 

இந்த வேளையிலே இன்னும் ஒன்றை நான் சொல்லி வைக்க விரும்புகிறேன்.  பிரச்சாரத்தின் போது நாம் கட்டுமானத்தைக் கண்காணிக்கும் அமைப்பைப்பற்றி ஒன்றுமே சொல்லவில்லை என்ற குற்றச் சாட்டு இன்றிரவு எம்மேல் வைக்கப்பட்டிருக்கிறது.  ஆனால் இரட்டைக் கலைப்பை நாங்கள் செய்ய வேண்டியதற்கான காரணமே அவர்கள் தான்.  அவர்களைக் கண்காணிக்கும் வழிகளை நாங்கள் நிச்சயம் கொண்டு வருவோம்.

நிச்சயம் நாங்கள் இன்னபமும் சில வாரங்களில் பெரும்பான்மை அரசாங்கம் ஒன்றை அமைப்போம் என்பதை உறுதியுடன் கூறுகிறேன்.

இந்த வேளையிலே ஆஸ்திரேலிய மக்களுக்கு நான் ஒன்றை நிச்சயம் சொல்ல வேண்டும்.  நாம் எல்லோரும் நாட்டின் பாதுகாப்புக்காகவும் வளர்ச்சிக்காகவும் ஒன்றாகப் பயணிக்க வேண்டும்.  எமது நாட்டின் கடன் குறைக்கப்பட வேண்டும் பாதுகாப்பு பலப்படுத்தப்பட வேண்டும்.  Labor கட்சி பொய் சொல்லி வாக்குகளைப் பெற்றிருக்கலாம்.  தேர்தல் முடிந்துவிட்டது.  வாக்குகளை எண்ணுவது மட்டும் தான் முடியவில்லை.  நாட்டின் எதிர்காலத்தைக் கட்டி எழுப்ப எமது கட்சிகளால் மட்டுமே முடியும்.  உங்கள் ஆதரவிற்கு நன்றி.

 

 

 


Follow SBS Tamil

Download our apps

Watch on SBS

Tamil News

Stream now