விக்டோரியா, நியூ சவுத் வேல்ஸ் மற்றும் டஸ்மேனியா மாநிலங்களிலுள்ள IGA, Campbells மற்றும் தனியார் கடைகளில் விற்பனை செய்யப்பட்ட மற்றுமொரு வகை frozen காய்கறி மீளப்பெறப்படுகின்றது.
Listeria பாக்டீரியா தொற்று ஏற்பட்டிருக்கலாம் என்ற சந்தேகம் எழுந்ததையடுத்து இவ்வறிவித்தல் விடுக்கப்பட்டுள்ளது.
நீங்கள் 1 kg Black and Gold mixed vegetables பாக்கெட்டுகளைக் கொள்வனவு செய்திருந்தால், அவற்றை எங்கு வாங்கினீர்களோ அங்கு கொண்டுசென்று கொடுப்பதன் மூலம் பணத்தை மீளப்பெற்றுக்கொள்ளலாம். அல்லது அவற்றை குப்பையில் எறிந்துவிடுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
இவ்வருட ஆரம்பத்தில் நியூ சவுத் வேல்ஸ் மற்றும் விக்டோரியாவில் ஏற்பட்ட Listeria தொற்று காரணமாக 6 பேர் உயிரிழந்திருந்த பின்னணியில் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக குறித்த frozen காய்கறி மீளப்பெறப்படுகின்றது.
ஏற்கனவே கடந்த ஜுலை ஆரம்பத்தில் ஒரு தொகுதி frozen காய்கறிகள் மீளப்பெறப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
