Powerball அதிஷ்டலாபச்சீட்டிழுப்பில் நியூசவுத் வேல்ஸ் மாநிலத்தை சேர்ந்த ஒருவருக்கு நேற்றிரவு எட்டு கோடி டொலர்கள் வெற்றிப்பணமாக கிடைத்துள்ளது.
பல ஆண்டுகளாக வறட்சியாலும் அதைத்தொடர்ந்து அண்மையில் ஏற்பட்ட காட்டுத்தீயாலும் பாதிக்கப்பட்டிருந்த விவசாயிக்கே இப்பரிசுத்தொகை கிடைத்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
குறிப்பிட்ட அதிஷ்டலாபச்சீட்டு இணையத்தில் கொள்முதல் செய்யப்பட்டிருந்ததால், சீட்டினை வாங்கியவரின் பெயர் தங்களுக்கு தெரியாது என்றும் அதிஷ்டசாலி தனது சீட்டின் ஆதாரத்தை நிரூபித்தால் மாத்திரமே அவரை தெரிந்துகொள்ளமுடியும் என்று The Lott நிறுவனம் அறிவித்திருந்த பின்னணியில் Port Macquarie -ஐ சேர்ந்த ஓய்வுபெற்றவரே இந்த அதிஷ்டசாலி என தெரியவந்துள்ளது.
முதல் டிவிஷனில் குறிப்பிட்ட நபர் எட்டு கோடி டொலர்களை தனியொருவராக வெற்றிபெற்றுள்ளவேளை -இரண்டாவது டிவிஷனில் 188 293.45 பணத்தை தலா ஐந்து பேர் வென்றுள்ளதாக The Lott தெரிவித்துள்ளது.
