SKIP TO MAIN CONTENT

தற்செயலாக Oz Lotto டிக்கெட்டை வாங்கியவர் $3 மில்லியன் வென்றுள்ளார்!!

கடந்த செவ்வாய் இரவு இடம்பெற்ற Oz Lotto அதிஷ்டலாபச் சீட்டிழுப்பில் $3 மில்லியன் பரிசு தொகை வென்று NSW Taree பகுதில் வசிக்கும் தாய் ஒருவர் ஒரே இரவில் மில்லியனர் ஆனார்.

Lotto change
Source: AAP / AAP-wikipedia.org

1 min read

Published

Updated

By Selvi

Source: SBS


Skip to article content

Oz Lotto அதிஷ்டலாபச் சீட்டிழுப்பு 1508-இல் ஒரே பிரிவில் அவர் மட்டுமே முழு தொகையையும் வென்றுள்ளார்.

"இது நம்பமுடியாதது. இது ஒரு அசாதாரண பணம், ”என்று அவர் கூறினார்.

"நான் வழக்கமாக Oz Lotto வாங்குவதில்லை - என் வாழ்க்கையில் இரண்டு முறை மட்டுமே நான் அதில் ஒரு டிக்கெட்டை வாங்கியிருக்கிறேன்." என்றும் அவர் மேலும் கூறினார்.

வழக்கமான அதிஷ்டலாபச் சீட்டு வாங்க சென்ற போது புதன்கிழமைக்கு பதிலாக செவ்வாய் இரவு சீட்டை தவறுதலாக வாங்கியதாகவும் அந்த சீட்டு அச்சிடப்பட்ட பிறகு, அது தவறானது என்பதை உணர்ந்ததாகவும் ஆனால் அதனை திருப்பி கொடுத்து மாற்ற விரும்பவில்லை என்று கூறி அவர் தனது மகிழ்ச்சியை பகிர்ந்துக்கொண்டார்.

"நான் அவ்வாறு திருப்பி கொடுக்காமல் வைத்துக்கொண்டதே என்னுடைய அதிஷ்டம்" என்றார் Taree-இல் வசிக்கும் அந்த தாய்.

SBS தமிழ் ஒலிபரப்பை திங்கள், புதன், வெள்ளி மற்றும் ஞாயிறு ஆகிய நாட்களில் இரவு 8 மணிக்கு SBS Radio 2 வழியாக கேட்கலாம்.

உங்களது பிரதேசத்துக்குரிய அலைவரிசை என்னவென்று தெரிந்துகொள்ள எமது tune in பக்கத்திற்குச் செல்லுங்கள்.

டிஜிட்டல் வானொலியில் செவிமடுக்க ‘SBS Radio’ எனத் தேடுங்கள்.


Follow SBS Tamil

Download our apps

Watch on SBS

Tamil News

Stream now