சீன புத்தாண்டு: 2022 நீர்-புலிகளின் ஆண்டு

சந்திரனின் சுழற்சியின் அடிப்படையில் கணிக்கப்படும், சீன புத்தாண்டு என்று பரவலாக அறியப்படும் Lunar புத்தாண்டு நேற்று, பிப்ரவரி முதல் நாள் தொடங்கியுள்ளது. ஆனால், அதன் அர்த்தம் என்ன?

Illustration material of the silhouette of a bouncing tiger seen from the side. Background material with Japanese-style pattern of red and gold.

2022 - Year of the Tiger Source: Getty Images

சீன இராசியில் 12 குறியீடுகள் உள்ளன, ஒவ்வொன்றும் ஒரு விலங்கின் பெயரிடப்பட்டு, 12 ஆண்டுகளுக்கு ஒரு முறை என்ற சுழற்சியில் ஒவ்வொரு வருடத்திற்கும் ஒவ்வொரு விலங்கு ஒதுக்கப்பட்டுள்ளது.  தற்போது எருது ஆண்டு முடிவடைந்து புலி ஆண்டு தொடங்குகிறது.

சீன இராசியின் 12 குறியீடுகளில் எந்தக் குறியீடு உங்களுக்கானது என்பதை இங்கே அறிந்து கொள்ளலாம்:

Chinese Zodiac
Chinese Zodiac Source: Chrissy Lau
சீன இராசிவிலங்குகளில் முதன்மையானது எலி.  எலி ஞானத்துடன் தொடர்புடையது.  எலியின் அடையாளத்தைக் கொண்டவர்கள்(2020, 2008, 1996, 1984, 1972, 1960, 1948 என்று 12 வருட இடைவெளியில் பிறந்தவர்கள்) படைப்பாற்றல், மற்றும் வளம் மிக்கவர்கள் என்றும் அனைத்திலும் ஒரு ஒழுங்கை கடைப்பிடிப்பவர்கள் என்றும் கூறப்படுகிறது.

எருது விடாமுயற்சியுடன் தொடர்புடையது.  காளையின் அடையாளத்தைக் கொண்டவர்கள் (2021, 2009, 1997, 1985, 1973, 1949 மற்றும் 1937 இல் பிறந்தவர்கள்) வலிமையானவர்கள், நம்பகமானவர்கள் மற்றும் மன உறுதி கொண்டவர்கள் என்று கூறப்படுகிறது.

வீரத்துடன் தொடர்புடையது புலி.  புலியின் அடையாளத்தைக் கொண்டவர்கள் (2010, 1998, 1986, 1974, 1962, 1950 மற்றும் 1938 இல் பிறந்தவர்கள்) சுதந்திரத்தை மதிப்பவர்கள் மற்றும் வலுவான நீதி உணர்வைக் கொண்டுள்ளனர்.

முயல் விவேகத்துடன் தொடர்புடையது.  முயலின் அடையாளத்தைச் சேர்ந்தவர்கள் (2011, 1999, 1987, 1975,1963, 1951 மற்றும் 1939 இல் பிறந்தவர்கள்) சிந்தனை மிக்கவர்கள் மற்றும் மற்றவர்களை வரவேற்கும் மனப்பாங்கு கொண்டவர்கள்.

ட்ராகன் (Dragon) வலிமையுடன் தொடர்புடையது.  ட்ராகன் இராசியில் பிறந்தவர்கள் (2012, 2000, 1988, 1976, 1964, 1952 மற்றும் 1940 இல் பிறந்தவர்கள்) மற்றவர்களுடன் நன்றாக இணைந்து வேலை செய்ய முனைகிறார்கள், ஆனால் தேவைக்கு அதிகமாக யோசிப்பவர்கள்.

பாம்பு நெகிழ்வுத்தன்மையுடன் தொடர்புடையது.  பாம்பின் அடையாளத்தைச் சேர்ந்தவர்கள் (2013, 2001, 1989, 1977, 1965, 1953 மற்றும் 1941 இல் பிறந்தவர்கள்) மற்றவர்களிடமிருந்து ஒதுங்கி வாழ விரும்புபவர்கள் போல் தோன்றலாம், ஆனால் விரைவாக சிந்திக்கும் திறன் கொண்டவர்கள் மற்றும் தீர்க்கமான முடிவெடுக்க வல்லவர்கள்.
வீரத்துடன் தொடர்புடையது புலி
விடாமுயற்சியுடன் குதிரை தொடர்புடையது.  குதிரையின் அடையாளத்தைக் கொண்டவர்கள் (2014, 2002, 1990, 1978, 1966, 1954 மற்றும் 1942 இல் பிறந்தவர்கள்) சில சமயங்களில் உணர்ச்சிகளைக் கட்டுப்படுத்த முடியாதவர்களாக இருக்கலாம்.

ஆடு அமைதியுடன் தொடர்புடையது.  ஆட்டின் அடையாளத்தைச் சேர்ந்தவர்கள் (2015, 2003, 1991, 1979, 1967, 1955 மற்றும் 1943 இல் பிறந்தவர்கள்) பெரும்பாலும் தாராள மனப்பாங்குடையவர்கள்.  அவர்கள் நேசமாக நடந்து கொள்வார்கள்.


புத்திசாலித்தனத்துடன் தொடர்புடையது குரங்கு.  ஆர்வம் மிக்கவர்களாக குரங்கின் அடையாளத்தைக் கொண்டவர்கள் (2016, 2004, 1992, 1980, 1968, 1956 மற்றும் 1944 இல் பிறந்தவர்கள்) இருந்த போதும், சில சமயங்களில் திமிர்பிடித்தவர்களாகவும், சுயநலவாதிகளாகவும் இருக்கலாம்.

சேவல் நிலைத் தன்மையுடன் தொடர்புடையது.  சேவல் அடையாளத்தைச் சேர்ந்தவர்கள் (2017, 2005, 1993, 1981, 1969, 1957 மற்றும் 1945 இல் பிறந்தவர்கள்) கடினமாக உழைக்கிறார்கள், அதே வேளை தமது சுதந்திரத்தைப் பெரிதும் மதிக்கிறார்கள்.

விசுவாசத்துடன் தொடர்புடையது நாய்.  நாயின் அடையாளத்தைச் சேர்ந்தவர்கள் (2018, 2006, 1994, 1982, 1970, 1958 மற்றும் 1946 இல் பிறந்தவர்கள்) மற்றவர்களையும் சூழலையும் நன்கு அவதானிப்பவர்களாகவும் நம்பகமானவர்களாகவும் கருதப்படுகிறார்கள்.

பன்றி நட்புறவுடன் தொடர்புடையது.  பன்றியின் அடையாளத்தைக் கொண்டவர்கள் (2019, 2007, 1995, 1983, 1971, 1959 மற்றும் 1947 இல் பிறந்தவர்கள்) பொருள் தேடுவதில் ஆர்வமுள்ளவர்களாக இருக்கலாம், ஆனால் அவர்கள் பணத்தைக் காப்பவர்கள் என்று கூற முடியாது.
சீனப் புத்தாண்டு ஜனவரி அல்லது பிப்ரவரியில் தொடங்குகிறது.  எனவே, நீங்கள் ஜனவரி மாதத்தில் அல்லது பிப்ரவரி மாதத்தில் பிறந்திருந்தால், உங்களது அடையாளம் நீங்கள் பிறந்த ஆண்டிற்கு முந்தைய ஆண்டின் அடையாளமாக இருக்கலாம்.

SBS தமிழ் ஒலிபரப்பை திங்கள், புதன், வெள்ளி மற்றும் ஞாயிறு ஆகிய நாட்களில் இரவு 8 மணிக்கு SBS Radio 2 வழியாக கேட்கலாம்.

உங்களது பிரதேசத்துக்குரிய அலைவரிசை என்னவென்று தெரிந்துகொள்ள எமது tune in பக்கத்திற்குச் செல்லுங்கள்.

டிஜிட்டல் வானொலியில் செவிமடுக்க ‘SBS Radio’ எனத் தேடுங்கள்.

 


Share

Published

Updated

By Zoe Victoria, Kulasegaram Sanchayan

Share this with family and friends


Follow SBS Tamil

Download our apps
SBS Audio
SBS On Demand

Listen to our podcasts
Independent news and stories connecting you to life in Australia and Tamil-speaking Australians.
Ease into the English language and Australian culture. We make learning English convenient, fun and practical.
Get the latest with our exclusive in-language podcasts on your favourite podcast apps.

Watch on SBS
Tamil News

Tamil News

Watch in onDemand