SKIP TO MAIN CONTENT

மோசடிக்காரர்களை தடுக்க Twitter நிறுவனம் புதிய நடவடிக்கை

Twitter logo is seen on an android mobile phone
Source: LightRocket

1 min read

Published

Presented by Renuka


Skip to article content

ஏனயை கணக்குகளை பின்தொடர்வோரின் (Followers) எண்ணிக்கையை நாளொன்றுக்கு நானூறாக குறைத்திருக்கிறது twitter சமூக வலைத்தளம்.

இதுவரை காலமும், twitter கணக்கு வைத்திருக்கும் ஒருவர் நாளொன்றுக்கு ஆகக்கூடியது ஆயிரம் பேரின் கணக்குகளை புதிதாக பின்தொடரலாம்.

ஆனால், இந்த வாய்ப்பு பல அநாமதேய மோசடிக்கணக்கு உரிமையாளர்களை  ஊக்குவிப்பதாக உள்ளது என்று உணரத்தொடங்கியதை அடுத்து, twitter நிறுவனம் அந்த எண்ணிக்கையை நாளொன்றுக்கு நானூறாக குறைத்திருக்கிறது.

இருப்பினும், தங்களை அடையாளப்படுத்தும் படிமுறையின் ஊடாக ஏனைய கணக்குகளை பின்தொடர விரும்பும் twitter கணக்குரிமையாளர்கள் தொடர்ந்தும் நாளொன்றுக்கு ஆயிரம் பேரை புதிதாக பின்தொடரமுடியும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Twitter நிறுவனத்தின் இந்த மாற்றம் குறித்து சமூக வலைத்தளத்தில் கருத்து தெரிவிக்கப்படும்போது - சாதாரண பயனாளர்கள் எவரும் நாளொன்றுக்கு ஆயிரம் கணக்குகளை பின்தொடர்வதற்கான முயற்சிகளில் ஈடுபடுவதில்லை என்றும், இந்த மாற்றமானது சாதாரண பயனாளர்களுக்கு எந்த பாதிப்பையும் எற்படுத்தப்போவதில்லை என்றும் கூறியுள்ளனர்.


Follow SBS Tamil

Download our apps

Watch on SBS

Tamil News

Stream now