SKIP TO MAIN CONTENT

'மோசடிகளில் ஈடுபட்ட இந்திய பிரஜை இங்கு சட்டவிரோதமாக வாழ்பவர்'

வயதானவர்களை மோசடி செய்து ஏமாற்றிவந்தார் என்ற குற்றச்சாட்டில் QLD மாநில காவல் துறையினரால் கடந்தவாரம் கைதுசெய்யப்பட்ட இந்திய நாட்டுப் பிரஜை ஆஸ்திரேலியாவில் சட்ட விரோதமாக வாழ்ந்துவந்துளார் என தெரியவந்துள்ளது.

cc
Source: Wikipedia

2 min read

Published

Updated

By Praba Maheswaran


Skip to article content

வயதானவர்களை மோசடி செய்து ஏமாற்றிவந்தார் என்ற குற்றச்சாட்டில் QLD மாநில காவல் துறையினரால் கடந்தவாரம் கைதுசெய்யப்பட்ட இந்திய நாட்டுப் பிரஜை ஆஸ்திரேலியாவில் சட்ட விரோதமாக வாழ்ந்துவந்துளார் என தெரியவந்துள்ளது.

முப்பத்துமூன்று வயதான ரிக்ஞ்ச் குமார் ஜோஷி கடந்த வெள்ளிக்கிழமை கைது செய்யப்பட்டார். வயதானவர்கள் மூவரை மோசடி செய்ததாக பொலிசார் அவர்மீது குற்றம் சாட்டியுள்ளனரென Newscorp செய்தி வெளியிட்டுள்ளது.

ஆஸ்திரேலிய வரித்திணைக்கள அலுவலர் போல் ஆள்மாறாட்டம் செய்து, மூன்று முதியோர்களிடம் தலா $5000 டாலர்கள் மோசடி செய்துள்ளதாக ஜோஷி மீது குற்றஞ்சாட்டப்பட்டுள்ளது.

இதுதொடர்பில் கடந்த சனிக்கிழமை Toowoomba நீதிமன்ற நீதிபதி முன்னிலையில் விசேட அமர்வொன்றில் ஆஜர் செய்யப்பட்ட ஜோஷிக்கு ஜாமீன் மறுக்கப்பட்டுள்ளது. மீண்டும் அவரை April 6ம் திகதி நீதிமன்றில் முன்னிலைப்படுத்த உத்தரவிடப்பட்டுள்ளது.

இதேவேளை, ஜோஷி பண்ணையொன்றில் உதவியாளராகப் பணிபுரிந்துவந்ததாகவும், அவரின் வங்கிக்கணக்கிற்கு குறிப்பிட்ட அந்தத் தொகைப் பணம் எவ்வாறு வந்துள்ளதென்பது புதிராகவுள்ளதாகவும் ஜோஷியின் சட்டத்தரணி தெரிவித்துள்ளார்.

Mr MacDonald was quoted as saying that the police material did not accuse Mr Joshi of being the primary mover in any offence.

He also said Mr Joshi will contest these charges.

However police opposed the bail.

Police prosecutor Sergeant Mike Robinson called the matter "very serious" and accused the defendant of "preying on the elderly".

Magistrate Kay Ryan also noted that Joshi was living as an illegal immigrant as his visa had expired in March 2015.

Ms Ryan said the case involved $15,000 which made it very serious and found Joshi an “unacceptable risk" that he would flee the country if granted bail.

Ms Ryan refused bail to Mr Joshi who will return to court on April 6.


Follow SBS Tamil

Download our apps

Watch on SBS

Tamil News

Stream now