SKIP TO MAIN CONTENT

மெல்பேர்ன் கப்: Vow and Declare வெற்றிவாகை சூடியது!

racing.com
Source: racing.com twitter

1 min read

Published

Updated


Skip to article content

ஆஸ்திரேலியாவையே ஒரு நிமிடம் ஸ்தம்பிக்க வைக்கும் போட்டி என வர்ணிக்கப்படும், மெல்பேர்ன் கிண்ண குதிரைப்பந்தயப் போட்டியில் ஆஸ்திரேலியக் குதிரையான Vow And Declare வெற்றி பெற்றது.

ஆஸ்திரேலியாவிலேயே பிறந்து வளர்ந்து ஆஸ்திரேலியர்களாலேயே பயிற்றுவிக்கப்பட்ட Vow And Declare-இன் வெற்றியானது மிகுந்த மகிழ்ச்சி தருவதாக இக்குதிரையை ஓட்டிச்சென்ற Craig Williams தெரிவித்தார். அதேநேரம் தனது மகிழ்ச்சியை வெளிப்படுத்த வார்த்தைகளே இல்லை என குதிரையின் பயிற்றுவிப்பாளர் Danny O'Brien குறிப்பிட்டார்.

இரண்டாம் இடத்தை Prince of Arran பெற்றுக்கொண்ட அதேநேரம் Il Paradiso என்ற குதிரை மூன்றாம் இடத்தைப் பிடித்தது.

இவ்வருட மெல்பேர்ன் கோப்பைக்கான வெற்றித்தொகை சுமார் 8 மில்லியன் டொலர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.


Follow SBS Tamil

Download our apps

Watch on SBS

Tamil News

Stream now