இணையமூடாக பொருட்களை விற்பனை செய்யும் அமேசன் நிறுவனத்தின் Warehouse ஒன்று மெல்பேர்னில் திறக்கப்படுகின்றது.
Dandenong தெற்கில் 24,000 சதுர மீட்டர் அளவில் அமைக்கப்படும் Warehouse-இல் பணிபுரிவதற்கான வாய்ப்பு நூற்றுக்கணக்கான ஆஸ்திரேலியர்களுக்கு வழங்கப்படவுள்ளதாக அந்நிறுவனம் அறிவித்துள்ளது.
மூன்றாம் தரப்பு வர்த்தக நிறுவனங்கள் பல அமேசன் ஊடாக தமது பொருட்களை விற்பனை செய்துவரும் நிலையில், ஆஸ்திரேலியாவிற்கான விநியோகங்கள் அனைத்தும் இப்புதிய Warehouse ஊடாக நடைபெறவுள்ளதாகவும் குறிப்பிடப்படுகின்றது.
இணைய விற்பனையில் கொடிகட்டிப்பறக்கும் அமேசன் நிறுவனம் ஆஸ்திரேலியாவிலும் கால்பதிப்பதானது, இங்குள்ள ஏனைய வர்த்தக நிறுவனங்களுக்கு பாரிய சவாலாக விளங்கும் என பொருளியில் வல்லுனர்கள் எதிர்வுகூறியுள்ளனர்.
